• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • மாருதி கார் வச்சுருக்கீங்களா? குளிர்காலத்தில் நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவைகள்

மாருதி கார் வச்சுருக்கீங்களா? குளிர்காலத்தில் நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவைகள்

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

குளிர்காலம் தொடங்கியிருப்பதால், மாருதி காரை முறையாக பராமரிப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை அந்நிறுவனம் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆண்டு இறுதி விற்பனையில் டாடா, மகேந்திரா, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆஃபர்களை அள்ளி வீசி வருகின்றன. இதேபோல், மாருதி சுசூகி நிறுவனமும் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதேவேளையில், குளிர்காலம் தொடங்கியிருப்பதால் காரை முறையாக பராமரிப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள மாருதி சுசூகி டீலர்கள், விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன. அதில், காரில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். பழைய உதிரி பாகங்களை மாற்றிவிட்டு புதிய உதிரிபாகங்களை பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பிரேக், என்ஜின், முகப்பு விளக்குகள், வைப்பர்ஸ் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள மாருதி நிறுவனம், ஒரிஜினல் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. 

குறிப்பாக, மாருதி நிறுவனத்தின் கம்பெனி பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மாருதி சுசூகி நிறுவனம் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. காற்றுமாசு பெரும் பிரச்சனையாக இருப்பதால், Car Ionizer + Air Purifier, Cabin Air Filter PM 2.5, N95 Mask/ Germ Buster உள்ளிட்ட உதிரி பாகங்களை வாங்கிக்கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், AC Disinfectant, Body Cover உள்ளிட்டவையும் இருப்பதால், டீலர்களிடம் கேட்டு மாருதி நிறுவனம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. 

மனித உயிர்கள் விலைமதிப்பற்றது என்பதால், முறையான உதிரி பாகங்களை வாகனத்தில் பொருத்தி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே தங்களின் முதல் நோக்கம் என மாருதி சுசூகி நிறுவனம் கூறியுள்ளது.

Also read... இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் விராட்- அனுஷ்கா ஜோடி...!

இதனிடையே, மாருதி சூசுகி நிறுவனம், கார் வாங்குபவர்களுக்கான ஸ்மாட்ர் பைனான்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவை மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையிலான தூரம் குறையும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அந்நிறுவனம், குறைவான நேரத்தில் விற்பனையை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

ஸ்மார்ட் பைனான்ஸ் தளத்தின் மூலம் ஒரு வாடிக்கையாளர் கார் லோன் பெறுவதற்கான தகுதிகளையும், கடன் காலம் எவ்வளவு போன்ற பிற முக்கிய விஷயங்களையும் பெற முடியும். ஸ்மார்ட் பைனான்ஸ் சேவை நெக்ஸா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அடுத்தகட்டமாக, அரினா வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்கப்படும் என மாருதி சுசூகி கூறியுள்ளது.

இந்தத் தளத்தில் வாடிக்கையாளர்கள் உகந்த வகையில் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அளிக்கும் வங்கிகளை ஒரே இடத்தில் தேர்வு செய்துகொள்ளலாம். மேலும், கார் தேர்வு முதல் கார் லோன்,  கடனுக்கான விண்ணப்பம் பதிவு, கடன் ஒப்புதல் பெறுதல் வரை அனைத்தும் இந்த தளத்தின் மூலம் மேற்கொள்ளும் வசதியை மாருதி சுசூகி உருவாக்கி கொடுத்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: