2019 ஜனவரி முதல் கார்களின் விலையை உயர்த்த மாருதி சுசூகி முடிவு!

மாருதி நிறுவனம் 2.53 லட்சம் ரூபாய் முதல் 11.45 லட்சம் ரூபாய் வரையிலான விலை கார்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

2019 ஜனவரி முதல் கார்களின் விலையை உயர்த்த மாருதி சுசூகி முடிவு!
மாருதி நிறுவனம் 2.53 லட்சம் ரூபாய் முதல் 11.45 லட்சம் ரூபாய் வரையிலான விலை கார்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
  • News18
  • Last Updated: December 5, 2018, 5:56 PM IST
  • Share this:
இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் பட்ஜெட் கார் நிறுவனமான மாருதி சுசூகி தங்களது தயாரிப்புகளின் விலை 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் ஏற்ற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

டொயோட்டா மற்றும் இசுசூ மோட்டார்ஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து மாருதி சுசூகி நிறுவனம் 2019 ஜனவரி 1 முதல் குறிப்பிட்ட சில கார் மாடல்களின் விலையை மட்டும் உயர்த்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இவர்களைப் பின்பற்றிப் பிற நிறுவனங்களும் தங்களது கார் மாடல்களின் விலையை ஏற்ற வாய்ப்புள்ளது.

கார் நிறுவனங்கள் விலையை உயர்த்துவற்கு முக்கியக் காரணம் இரும்பு மற்றும் ஸ்டீல் விலை அதிகரித்துள்ளதே ஆகும். அதுமட்டும் இல்லாமல் பிற மூலப் பொருட்களின் விலையும் ஏற்றம் அடைந்துள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.


மாருதி நிறுவனம் 2.53 லட்சம் ரூபாய் முதல் 11.45 லட்சம் ரூபாய் வரையிலான விலை கார்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில் எந்த மாடல் கார் விலை எல்லாம் உயர போகிறது என்ற விவரங்களை மட்டும் தெரிவிக்கவில்லை.

இசுசூ மோட்டார்ஸ் இந்தியா ஜனவரி மாதம் முதல் தங்களது கார்களின் விலை அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை ஏறும் என்று தெரிவித்துள்ளது.

டொயோட்டா நிறுவனம் தங்களது கார்களின் விலை 4 சதவீதம் உயரும் என்றும் இதற்கு முக்கியக் காரணம் கடந்த சில மாதங்களாக ரூபாய் மதிப்பு சரிந்து வந்ததே எனவும் தெரிவித்துள்ளது.
First published: December 5, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்