Maruti Offer : ஜூலை 31 வரை மாருதி நிறுவனம் அறிவித்த அதிரடி ஆஃப்ர்கள்..!

மாருதி நிறுவனம்

ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவின் ஜூன் 2021 விற்பனை, ஆண்டுக்கு ஆண்டு மற்றும் தொடர்ச்சியான அடிப்படையில் விண்ணைத் தொட்டது.

  • Share this:
ஊரடங்குக் காரணமாக மாருதி நிறுவனம் இலவச சர்வீஸ் மற்றும் உத்தரவாதம் நீட்டிப்பை அறிவித்துள்ளது. வாகனங்களுக்கான சர்வீஸ் மற்றும் உத்தரவாதம், மார்ச் 15, 2021 முதல் ஜூன் 30 2021 வரையிலான தேதிகளில் காலாவதியான வாகனங்களுக்கு மட்டுமே இந்த இலசவ சர்வீஸ் மற்றும் உத்தரவாதம் செல்லுபடியாகும். இந்த இலவச சேவை ஜூலை 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான மாருதி சுஸுகி இந்தியா, தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகளை இன்று அறிவித்துள்ளது. வாகனத்திற்கான இலவச சர்வீஸ், உத்தரவாதம் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை ஜூலை 31, 2021 நீட்டிப்பதாக, இன்று அறிவித்துள்ளது.

மாருதி சுஸுகி இந்தியாவின் மூத்த நிர்வாக இயக்குநர் (சர்வீஸ்) திரு. பார்த்தோ பானர்ஜி, “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகள், உத்தரவாதம் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை ஜூலை 31 2021 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். இது எங்கள் வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாங்கள் எடுத்துள்ள முடிவு. கொரோனா தொற்று அனைவரையும் பாதித்துள்ள தற்போதைய காலகட்டத்தில், வாகன இயக்கமும் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ​​வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளை தங்கள் வசதிக்கேற்ப பெற்றுக்கொள்ளலாம்.

Also Read : இந்தியாவில் படுமாஸாக களமிறங்கும் "BMW M5 Competition" வாகனம் - விலை எவ்வளவு தெரியுமா?

எங்கள் வொர்க்ஷாப்கள் அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட அனைத்து பாதுகாப்பு SOP களையும் பின்பற்றுகின்றன. கூடுதலாக, வொர்க்ஷாப்பிற்கு வருகை தந்து வாகன சர்வீஸ் செய்ய முடியாதவர்களுக்கு, நாங்கள் இலசவமான பிக்-அப் மற்றும் டிராப் சேவையையும் வழங்குகிறோம். எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களின் சிறந்த பராமரிப்பிற்காக இந்த சேவைகளைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவின் ஜூன் 2021 விற்பனை, ஆண்டுக்கு ஆண்டு மற்றும் தொடர்ச்சியான அடிப்படையில் விண்ணைத் தொட்டது. அதன்படி, நிறுவனம் ஜூன் 2021 இல், மொத்தம் 147,368 யூனிட்டுகளை விற்பனை செய்தது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 57,428 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, நிறுவனத்தின் மொத்த விற்பனையும் மே 2021 இல் 46,555 ஆக இருந்தது. கோவிட்டின் இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் முதல் மே வரை குறைந்த வாகனை விற்பனை, ஜூன் முதல் அபாரமான வேகத்தில் வளர்ந்து வருகிறது.

Also Read : சென்னையில் ஒரு கோடியாவது கார் தயாரிப்பு - ஹூண்டாய் நிறுவனம் சாதனை!

அடிப்படையாக விற்பனையாகும் விகிதம் காரணமாக, இது ஆண்டுக்கு ஆண்டு வேகமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. "இந்த மாதத்தில் மொத்த விற்பனையில் உள்நாட்டு விற்பனை 1,26,196. மற்ற விற்பனை OEM யூனிட்டுகளுக்கான விற்பனை 4,152 மற்றும் 17,020 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன" என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கை, FY20-21 மற்றும் FY21-22 இரண்டின் முதல் காலாண்டில் விற்பனை 'கோவிட் -19 ஊரடங்கு மற்றும் இடையூறுகள் காரணமாக இயல்பிலிருந்து மிகவும் குறைவாக உள்ளது, எனவே எந்தவொரு ஒப்பீடும் அர்த்தமுள்ளதாக இருக்காது' என்று தெரிவித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: