• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • மாருதி சுசுகி அறிவித்துள்ள சூப்பர் சலுகைகள்: இந்த மாதம் ரூ.52,000 வரை தள்ளுபடி பெறலாம்!

மாருதி சுசுகி அறிவித்துள்ள சூப்பர் சலுகைகள்: இந்த மாதம் ரூ.52,000 வரை தள்ளுபடி பெறலாம்!

தள்ளுபடி திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த மாதம் வாடிக்கையாளர்கள் வாங்கும் பல்வேறு கார் மாடல்களுக்கு ரூ.52,000 வரை சலுகைகளை பெறலாம் என ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  • Share this:
உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 2020-ம் ஆண்டில் விற்பனையில் பெரும் சரிவை கண்ட பிறகு தற்போது வாகனத் தொழில் மீண்டும் சற்று வளர்ச்சியை கண்டு வருகிறது. பல பிராண்டுகள் தங்கள் விற்பனையை அதிகரிக்க வெவ்வேறு திட்டங்கள் மற்றும் நுட்பங்களை அவ்வப்போது பயன்படுத்தி வருகின்றன. அவ்வகையில் மாருதி சுசுகியும் இந்தியாவில் தனது அரினா டீலர்ஷிப்களில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. தள்ளுபடி திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த மாதம் வாடிக்கையாளர்கள் வாங்கும் பல்வேறு கார் மாடல்களுக்கு ரூ.52,000 வரை சலுகைகளை பெறலாம் என ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் பிப்ரவரி மாதம் முழுவதும் மாருதி சுசுகியின் கார் மாடல்களில் ஏதேனும் ஒன்றை வாங்கினால் உங்களுக்கு கிடைக்க போகும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்விஃப்ட் (Swift): இந்த மாதம் ஸ்விஃப்ட் நான்கு சக்கர வாகனத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.42,000 வரை சலுகைகளைப் பெறலாம். வாங்குபவர்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், கார் தயாரிப்பாளர் நிறுவனம் வரும் மாதங்களில் ஃபேஸ்லிஃப்ட் ஸ்விஃப்ட்டை (facelifted Swift) அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்டோ (Alto): சிறிய அளவிலான நான்கு சக்கர வாகனம் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆட்டோமொபைல் சந்தையில் முன்னோடியாக இருக்கிறது. காரின் மிகப்பெரிய யுஎஸ்பிக்கள் அதன் விலை மற்றும் எரிபொருள் செயல்திறனாக தொடர்கின்றன. அதன்படி பிப்ரவரியில் இந்த வாகனத்தை வாங்குபவர்கள் ரூ .37,000 மதிப்புள்ள சலுகைகளைப் பெற முடியும்.

டிசைர் (Dzire): இந்த மலிவு விலை செடான் சுமார் ரூ.52,000 மதிப்புள்ள சலுகைகளுடன் கிடைக்கிறது. டிசைர் சமீபத்தில் ஒரு ஃபேஸ்லிஃப்டை வேரியண்ட்டுடன் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த பிராண்ட் 90 ஹெச்பி, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் புதிய முன்-இறுதி வடிவமைப்பை உள்ளடக்கியது.

எஸ்-பிரஸ்ஸோ (S-Presso): பெப்பி ஹேட்ச்பேக் கார் ஒரு விசாலமான கேபின் இடம் மற்றும் அதன் வடிவமைப்பிற்கு முக்கியமாக அறியப்படுகிறது. வாகனம் இந்த மாதம் ரூ .52,000 வரை சலுகைகளுடன் வழங்கப்படுகிறது.

செலெரியோ (Celerio): பிப்ரவரி மாதத்தில் இந்த கார் ரூ .47,000 மதிப்புள்ள சலுகைகள் மற்றும் ரூ .20,000 ரொக்க தள்ளுபடி மற்றும் பரிமாற்ற போனஸுடன் கிடைக்கிறது. ஏஎம்டி விருப்பம் மற்றும் தொழிற்சாலை பொருத்தம் சிஎன்ஜி கிட் போன்றவை தான் இந்த காரை மக்கள் அதிகம் விரும்புவதற்கான ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

வேகன்-ஆர் (Wagon-R): மிகவும் பிரபலமான வாகனங்களில் ஒன்றான வேகன்-ஆர், மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இரண்டையும் கொண்டுள்ளது. ஹூண்டாய் சாண்ட்ரோவுக்கு போட்டியாக கருதப்படும் சிறிய அளவிலான வேகன்-ஆர் ரூ.30,000 மதிப்புள்ள சலுகைகளுடன் வழங்கப்படுகிறது.

விட்டாரா ப்ரெஸா (Vitara Brezza): எரிபொருள் திறனுள்ள எஸ்யூவி சவுகரியமான கேபின் இட வசதியுடன் வருகிறது. இந்த மாதம் இந்த கார் ரூ.35,000 மதிப்புள்ள சலுகைகளுடன் கிடைக்கிறது. அம்சங்களின் அடிப்படையில் இந்த கார் அதன் விலை வரம்பில் கிடைக்கும் மற்ற கியா சோனெட் மற்றும் ஹூண்டாய் கார்களை விட சற்று பின்தங்கியிருக்கிறது.

ஈகோ (Eeco): விசாலமான கார் 73 ஹெச்பி, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் சிஎன்ஜி கிட் விருப்பமும் உள்ளது. இந்த நான்கு சக்கர வாகனத்திற்கு இந்த மாதம் ரூ.37,000 வரை தள்ளுபடியை பெறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: