Home /News /automobile /

பட்ஜெட்டில் சொல்லி அடிக்கும் மாருதி சுசுகி.. ஸ்டைலிலும் அசத்தும் புதிய ஆல்டோ கே10 மாடல்

பட்ஜெட்டில் சொல்லி அடிக்கும் மாருதி சுசுகி.. ஸ்டைலிலும் அசத்தும் புதிய ஆல்டோ கே10 மாடல்

மாருதி சுசுகி ஆல்டோ கே10

மாருதி சுசுகி ஆல்டோ கே10

Maruti Suzuki Alto K10 | பட்ஜெட் லெவல் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக இந்த ஆண்டில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மிக முக்கிய தயாரிப்பாக ஆல்டோ கே10 இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மாருதி சுசுகி நிறுவனம் சார்பில் ஆல்டோ கே10 கார் கடந்த வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மாருதி நிறுவனத்தின் பட்ஜெட் கார் வரிசையில் பெரும் அளவில் விற்பனை செய்யப்பட்ட ஆல்டோ 800 காரின் அடுத்த வெர்சனாக இந்த கே10 கார் இந்திய சந்தையில் நுழைகிறது.

    ஏற்கனவே உள்ள ஆல்டோ 800 விலையை ஒட்டி இந்த காரின் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் ஷோரூம் மதிப்பின்படி இதன் விலை 5.83 லட்சம் ஆகும். முந்தைய ஜெனரேஷன் மாடல்களை ஒப்பிடும்போது புதிய கே10 மாடலானது முற்றிலும் வித்தியாசமாக அமைந்துள்ளது.

    அதே சமயம், ஒரு சில டிசைன்கள் அப்படியே அமைந்துள்ளன. சிறிய ரக பட்ஜெட் கார் வரிசையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ மற்றும் ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் ஆகிய கார்களுக்கு இது போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டிசைன் எப்படி இருக்கிறது?

    5ஆவது ஜெனரேஷன் ஹார்ட்டெக்ட் ஃபிளாட்ஃபார்ம் அடிப்படையில், ஆல்டோ கே10 மாடல் ஸ்டைல் மாற்றி அமைக்கப்பட்டு, பிளாக் மெஷ் போல அமைந்துள்ளது. கிரில்லே பகுதி பழைய மாடல் போலவே உள்ளது. முகப்பு விளக்குகள், முகப்பு பம்பர் மற்றும் போனட் போன்றவை முற்றிலும் மாறுபட்ட பார்வையை கொண்டுள்ளன.

    Read More : 10 லட்சத்திற்கும் குறைவான சிறந்த கார்களின் பட்டியல் இதோ..




    காரின் பக்கவாட்டு டிசைன் மற்றும் பின்பக்க டிசைன் ஆகியவையும் கூட மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மாருதி செலிரியோ கார் போல உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு கே10 இம்பாக்டோ மற்றும் கிளிண்டோ ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கார் வழங்கப்படும்.

    6 விதமான கலர்கள்

    வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வுகளை பூர்த்தி செய்யும் விதமாக இந்த கார் 6 டிசைன்களில் வந்துள்ளது. இண்டீரியரிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் மிக முக்கியமானது என்ன என்றால் ஸ்மார்ட்பிளே டச் ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயிண்மெண்ட் சிஸ்டம் தான். இதில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்டு கனெக்டிவிட்டி வசதிகள் உள்ளன.

    இது மட்டுமல்லாமல் ரிமோட் கீ ஆக்சஸ், எலெக்ட்ரிக்கல் மூலம் மாற்றியமைக்க தக்க ஓஆர்விஎம்எஸ் மற்றும் ஸ்டீயரிங்கில் நிறைய கண்ட்ரோல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    முக்கியமான தயாரிப்பு

    மார்க்கெட்டில் அடுத்தடுத்து வரும் சிறப்பான கார்கள் மற்றும் எஸ்யூவி வகை கார்களில் போட்டியை தக்க வைத்துக் கொள்ள மாருதி நிறுவனம் முயற்சி செய்து வரும் அதே சூழலில், பட்ஜெட் லெவல் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக இந்த ஆண்டில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மிக முக்கிய தயாரிப்பாக ஆல்டோ கே10 இருக்கிறது.

    இந்தக் கார் 1 லிட்டர் கே சீரிஸ் டூயல் ஜெட், டூயல் விவிடி என்ஜின் கொண்டது. சுமார் 24.90 கி.மீ. மைலேஜ் தரும். டூயல் ஏர்பேக்ஸ், ஸ்பீடு சென்சார் போன்ற வசதிகளும் உள்ளன.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Automobile, Maruti Suzuki

    அடுத்த செய்தி