Home /News /automobile /

சிஎன்ஜி மாடலில் 9 கார்கள்... 6 லட்சம் வாகனங்கள் விற்பனை.. மாருதி சுஸுகி இலக்கு!

சிஎன்ஜி மாடலில் 9 கார்கள்... 6 லட்சம் வாகனங்கள் விற்பனை.. மாருதி சுஸுகி இலக்கு!

maruti suzuki cng car

maruti suzuki cng car

Maruti Suzuki CNG Car | மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு கார்கள் அறிமுகம் செய்யப்படுவதன் அடிப்படையில், இனி வரும் ஆண்டுகளில் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சிஎன்ஜி கார்களின் விற்பனை அளவு அதிகமாக இருக்கும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
மாருதி சுஸுகி நிறுவனம் இந்த நிதியாண்டில் 4 லட்சம் முதல் 6 லட்சம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் எந்த அளவுக்கு தடை இல்லாமல் கிடைக்கிறது என்பதை பொருத்து இந்த இலக்கு மாறுபடும். கடந்த 2021 - 2022 நிதியாண்டில் இந்த நிறுவனம் மொத்தம் 2.3 லட்சம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

தற்போதைய சூழலில், மாருதி சுஸுகி நிறுவனம் சார்பில் சிஎன்ஜி வகையில் 9 மாடல் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இனி வரும் நாட்களில் இந்த வகை கார்களின் உற்பத்தியையும், வெவ்வேறு மாடல்களையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு கார்கள் அறிமுகம் செய்யப்படுவதன் அடிப்படையில், இனி வரும் ஆண்டுகளில் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சிஎன்ஜி கார்களின் விற்பனை அளவு அதிகமாக இருக்கும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் மூத்த முதன்மை இயக்குநர் (விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்) சஷாங்க் ஸ்ரீவஸ்த்தவா கூறுகையில், “தற்போது எங்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் சிஎன்ஜி வாகனங்களின் விற்பனை மட்டும் 17 சதவீதம் அளவுக்கு இருக்கிறது. சிஎன்ஜி மாடலில் எங்களிடம் 9 கார்கள் உள்ளன. எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மாற்று எரிபொருளாக உள்ள சிஎன்ஜி-யில் இயங்கும் வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த வகை வாகனங்களின் ரன்னிங் காஸ்ட் மிக குறைவு.



ஆக, அதிகமான மக்கள் இந்த வகை வாகனங்களை விரும்பும் காரணத்தால் கடந்த சில ஆண்டுகளில் எங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருகிறது’’ என்று தெரிவித்தார். கடந்த 2016 - 2017 நிதியாண்டில் 74,000 சிஎன்ஜி வாகனங்களும், 2018 - 19 நிதியாண்டில் 1 லட்சம் சிஎன்ஜி வாகனங்களும், 2019 - 20 நிதியாண்டில் 1.05 லட்சம் வாகனங்களும், 2020 - 21 நிதியாண்டில் 1.62 லட்சம் சிஎன்ஜி வாகனங்களும் மாருதி சுஸுகி நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

Also Read : கார் லோன் எடுக்கும் ஐடியா இருக்கா? இதை படியுங்கள்..

அரசின் இலக்கு மற்றும் நோக்கம் :

பெட்ரோல், டீசல் போன்ற புதைவடிவ எரிபொருள்களை தயாரிக்க மூல ஆதாரமாக உள்ள கச்சா எண்ணெய் விலை நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால், நாளடைவில் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொள்ள மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. குறிப்பாக, உள்நாட்டில் இயல்பாக கிடைக்கக் கூடிய இயற்கை எரிவாயுவை அதிகம் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read : ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக மலிவு விலைவில் கிடைக்கும் டாப் 5 கார்களின் பட்டியல்!

தற்போது 6.2 சதவீதமாக உள்ள இயற்கை எரிவாயு பயன்பாட்டை, 2030ஆம் ஆண்டுக்குள் 15 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தை செயல்படுத்தும் வகையில் நாடெங்கிலும் சிஎன்ஜி எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Maruti Suzuki

அடுத்த செய்தி