மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவின் மிகப் பழமையான கார் தாயாரிப்பு நிறுவனமாகும். நம்ம ஊரு காரு என்ற சிறப்பு பெயரும் இருக்கிறது மாருதி கார்களுக்கு. கார் வாங்குவதை எல்லாருக்கும் சாத்தியமானதாக மாற்றிய பெருமை மாருதி சுசுகியையே சாரும்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய கார் சந்தையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது மாருதி சுசுகி. பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறது. இந்த நிறுவனம். அந்த வரிசையில் பிப்ரவரி மாத இந்திய கார்கள் விற்பனையில் மீண்டும் ஒரு சாதனையை சொந்தமாக்கியிருக்கிறது மாருதி சுசுகி நிறுவனம்.
கடந்த மாதம் அதிகம் விற்பனையானதாக பட்டியிடப்பட்ட பத்து கார்கள் பட்டியலில் ஆறு கார்கள் மாருதி சுசுகி தயாரிப்புகளாகும். அவை என்னென்ன கார்கள் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
ஹேட்ச்பேக், செடான் மற்றும் எஸ்யுவி என அனைத்து வேரியண்ட் கார்களிலும் மாருதி சுசுகி தயாரிப்புகளே முன்னிலையில் இருக்கிறது. இதில் மாருதி பெலினோ கார்தான் மாப் வரிசையில் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் இந்தியா முழுவதும் 18,592 பெலினோ கார்கள் விற்பனையாகியுள்ளன. அதைத் தொடர்ந்து மாருதி ஸ்விஃப்ட் 18,412 கார்கள் விற்பனையாகியுள்ளன.
மேலும், 18, 114 ஆல்டோ கார்கள், 16,889 மாருதி சுசுகி வேகன் ஆர் கார்கள் என ஹேட்ச் பேக் வேரியண்ட் விற்பனையில் கலக்கியுள்ளது மாருதி சுசுகி நிறுவனம். அதே போல் டாப் செல்லிங் பட்டியலில் செடான் டைப் கார்கள் வரிசையில் மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட் டிசையர் மட்டுமே இடம் பிடித்துள்ளது.
எஸ்யுவி வரிசையிலும் மாருதி சுசுகி தயாரிப்புக்கே முதலிடம். இந்த வேரியண்ட் கார்கள் விற்பனையில் மாருதி சுசுகியின் பிரீசா முதலிடத்தில் உள்ளது. பிப்ரவரி மாதம் மட்டும் 15,787 பிரீசா கார்கள் விற்பனையாகியுள்ளன. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் டாடா நெக்சான், டாடா பஞ்ச் மற்றும் ஹூண்டாய் கிரீட்டா ஆகிய கார்கள் இடம் பிடித்துள்ளன. வேன்கள் விற்பனையிலும் மாருதி சுசுகியின் ஈகோ முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிப்ரவரி மாதம் 11,352 ஈகோ வேன்கள் விற்பனையாகியுள்ளன.
இப்படி அனைத்து வேரியண்ட் ரக கார்களிலும் மாருதி சுசுகி கார்கள் அதிக அளவு விற்பனையாகி வருகிறது. சரியான மற்றும் கட்டுபடியாகும் விலை, நல்ல மைலேஜ், தாராளமாக கிடைக்கும் உதிரி பாகங்கள், நாடு முழுவதும் ஏராளமான சர்வீஸ் மையங்கள் என இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பும் பல்வேறு அம்சங்கள் மாருதி சுசுகி நிறுவனத்திடம் கிடைக்கிறது. அதனால் மக்களின் மனம் கவர்ந்த காராக தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றன மாருதி கார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Cars, Maruti Suzuki, Suv car