கோளாறு: 1.81 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது மாருதி நிறுவனம்!

மாருதி சுசுகி

வாகன உற்பத்தி நிறுவனங்கள் தானாக முன்வந்து திரும்பப்பெறும் உத்தரவை பிறப்பிப்பது உலகெங்கிலும் பொதுவானாக நடக்கும் ஒரு விஷயம் தான்.

  • Share this:
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களில் 1.81 லட்சம் யூனிட்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக ஒரு அதிரடி அறிவிப்பை பிறப்பித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய தவறுகளை கண்டறிந்து அதனை சரிசெய்யவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வாகனங்களை திரும்பப்பெறும் முடிவினை நிறுவனம் தானாக முன்வந்து எடுத்துள்ளதாகவும் மற்றும் பாதிக்கப்பட்ட வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள், மாருதி சுசுகியின் அங்கீகரிக்கப்பட்ட பட்டறை மூலம் தொடர்பு கொள்ளப்படுவார்கள் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்ட நிறுவனம், மாருதி சுசுகி சியாஸ்(Ciaz), எஸ்-கிராஸ் (S-Cross), விட்டாரா ப்ரெஸ்ஸா (Vitara Brezza), எர்டிகா (Ertiga) மற்றும் எக்ஸ்எல் 6 (XL6) ஆகியவற்றின் பெட்ரோல் மாதிரிகள் மற்றும் 2018 மே 4ம் தேதி முதல் 2020 அக்டோபர் 27ம் தேதிக்கு இடையில் தயாரிக்கப்பட்ட யூனிட்களை மட்டும் நிறுவனம் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளது. அந்த வாகனங்களில் மோட்டார் ஜெனரேட்டர் யூனிட் பரிசோதிக்கப்படும் என்றும், அதில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால், வாடிக்கையாளருக்கு எந்த செலவும் இல்லாமல் மாற்றித்தரப்படும் என்றும் நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பழுதடைந்த பாகங்களை மாற்றுவதற்கான செயல்முறை நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே நவம்பர் மாதம் வரை, மேற்கண்ட குறிப்பிட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், வாகனத்தின் மின் மற்றும் மின்னணு பாகங்களில் நேரடியாக தண்ணீர் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மாருதி சுசுகி கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் வாகன உரிமையாளர்கள் மாருதி சுசுகி அல்லது நெக்ஸா வலைத்தளங்களில் உள்நுழைந்து தங்கள் வாகனம் திரும்பப்பெறுதல் உத்தரவின் கீழ் இருக்கிறதா என்றும் சோதிக்கலாம். இந்த பழுது பார்க்கும் நடவடிக்கை அந்த வாகனத்தின் மாடலை பொறுத்தே அமையும். இதற்கு வாடிக்கையாளர்கள் வாகனங்களின் சேஸ் எண் -ஐ (MA3, 14 இலக்க ஆல்பா-எண் குறியீடு) உள்ளீடு செய்து அவர்களின் வாகனத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

Also read... இந்தியாவில் அறிமுகமானது ரெனால்ட் க்விட் வாகனம்... அதுவும் பட்ஜெட் விலையில்!

வாகன உற்பத்தி நிறுவனங்கள் தானாக முன்வந்து திரும்பப்பெறும் உத்தரவை பிறப்பிப்பது உலகெங்கிலும் பொதுவானாக நடக்கும் ஒரு விஷயம் தான். கார் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக்கூடிய வாகனங்களின் வாடிக்கையாளர்களை அணுகி, அத்தகைய யூனிட்டுகளை சரிபார்ப்புக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்வர். அதில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால், பழுது பார்ப்பது அல்லது அந்த குறிப்பிட்ட பாகத்தை மாற்றுவது எப்போதும் இலவசமாக மேற்கொள்ளப்படும். கடந்த காலத்தில், அமெரிக்காவில் உள்ள சில வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் குறைபாடுகளை சரிசெய்ய திரும்பப் பெறும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இதன் காரணமாக அந்த குறிப்பிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிக அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published: