Home /News /automobile /

அசத்தலாக வெளிவர இருக்கிறது மாருதி ஆல்டோ 2022 - என்னென்ன சிறப்பம்சங்கள்.!

அசத்தலாக வெளிவர இருக்கிறது மாருதி ஆல்டோ 2022 - என்னென்ன சிறப்பம்சங்கள்.!

alto k10

alto k10

Maruti Alto K10 2022 | மாருதி சுஸுகி நிறுவன தயாரிப்பில் மிக நல்ல விற்பனையை பெற்ற ஆல்டோ கார் என்பது சுமார் 22 ஆண்டுகால புகழ் கொண்டதாகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
புதிய ஜெனரேஷன் ஆல்டோ கே10 என்ற மாடலை இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது. நாட்டில் பயன்பாட்டில் உள்ள பழமையான கார் வகைகளில் ஆல்டோவும் ஒன்றாகும். இந்த காரை வாங்குவதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.11,000 செலுத்தி காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்னதாக, கடந்த 2010ஆம் ஆண்டில் ஆல்டோ கே10 மாடல் இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி சுஸுகி நிறுவன தயாரிப்பில் மிக நல்ல விற்பனையை பெற்ற கார்களில் இதுவும் ஒன்றாகும். ஆல்டோ கார் என்பது சுமார் 22 ஆண்டுகால புகழ் கொண்டதாகும்.

தற்போதைய புதிய ஜெனரேஷன் மாடலில் டிசைன், அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. சிறிய ரக கார் ரகங்களில் இந்தியாவில் விற்பனையாகி வரும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்துவதாக இது அமையும்.

வேரியண்ட்

மொத்தம் 6 வேரியண்ட்களில் ஆல்டோ கே10 வர இருக்கிறது. குறிப்பாக எஸ்டிடி (ஓ), எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ போன்றவை வர இருக்கின்றன. முதன்மையான வேரியண்ட்களில் மேனுவல் மற்றும் ஆடோமேடிக் கியர் பாக்ஸ் ஆகிய வாய்ப்புகள் வழங்கப்படும்.



 

கலர்

எக்ஸ்டீரியர் அளவில் 6 கலர்களில் கார் வர இருக்கிறது. சாலிட் வொயிட், ப்ரீமியம் எர்த் கோல்டு, மெடாலிக் சிஸ்ஸிலிங் ரெட், மெடாலிக் ஸ்பீடி ப்ளூ, மெடாலிக் சில்கி சில்வர், மெடாலிக் கிரானைட் க்ரே ஆகிய கலர்களில் கார் விற்பனைக்கு வருகிறது.

என்ஜின்

புதிய கே1சி சீரீஸ் பெட்ரோல் என்ஜின்களுடன் ஆல்டோ கே10 கார் வர இருக்கிறது. இதில் அதிகபட்சமாக 68 பிஎஸ் வேகம் மற்றும் அதிகபட்சமாக 90 என்எம் டார்க் ஆகியவை இடம்பெறும். இதேபோன்று மாருதியின் எஸ் பிரெஸ்ஸோ மாடல் காரிலும் இதே என்ஜின் பொருத்தப்பட இருக்கிறது.

Also Read : 10 லட்சத்திற்கும் குறைவான சிறந்த கார்களின் பட்டியல் இதோ..

மைலேஜ்

குறைவான பராமரிப்பு செலவு, அதிக செயல்திறன் என்பதே கடந்த காலங்களில் ஆல்டோ காருக்கு அதிக வரவேற்பு இருந்ததற்கு காரணம். தற்போதைய மாடலில் லிட்டருக்கு 25 கி.மீ. மைலேஜ் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கியர்பாக்ஸ்

ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் முறையை இதிலும் செயல்படுத்துகிறது மாருதி நிறுவனம். அவுட்புட் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



சிறப்பம்சம்

மாருதி ஆல்டோ கே10 காரின் டைமன்சன் என்பது முந்தைய மாடல்களைப் போலவே இருக்கும். புதிய ஹார்டக்ட் தளத்தை ஒட்டி அமையும்.

டிசைன்

காரின் முகப்பு டிசைன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பின்பக்க டிசைன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல இண்டீரியரிலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

Also Read : ரூ.60 ஆயிரம் வரை அதிரடி ஆபர்களை அறிவித்த ரெனால்ட்.! 

வசதிகள்

புதிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெய்ண்மெண்ட் சிஸ்டம் இதில் இடம்பெற்றுள்ளது. சிறப்பான இசை அனுபவத்தை இது கொடுக்கும்.



பாதுகாப்பு

காரின் முன்பக்கம் இரண்டு ஏர் பேக் இடம்பெறுகிறது. இது தவிர ஏபிஎஸ் + இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீட் அலர்ட், சீட் பெல்ட் வார்னிங் ஆகியவை இடம்பெறுகிறது.

விலை

புதிய ஆல்டோ கே10 கார் என்பது எக்ஸ் ஷோரூம் மதிப்பின் படி ரூ.3.50 லட்சம் முதல் ரூ.3.75 லட்சம் வரையில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Car, Maruti Suzuki

அடுத்த செய்தி