உலகம் முழுவதும் பல்வேறு விமான நிறுவனங்கள் மே மாதத்தில் பல்லாயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளதால் பயணிகள் சிரமமான சூழலைச் சந்தித்து வருகின்றனர். மேலும் விமான நிலையங்கள் பல தொழில்நுட்ப கோளாறுகளைச் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதால் அதிகளவில் விமானங்களை இயக்க முடியவில்லை.
உலகம் முழுவதும் அனைத்து நாடுகளையும் இணைக்கும் பாலமாக விமானச் சேவை செயல்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்றுக்காலத்தில் அனைத்து போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்ட நிலையில், பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை விமான நிறுவனங்கள் பணிநீக்கம் செய்தது. மேலும் இத்துறையை விட்டு பலர் வெளியேறியதால் பணியாளர்களின் பற்றாக்குறைக் காரணமாகப் பல விமான நிலையங்கள் தாமதமாக இயக்கப்பட்டது. இதோடு பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும் பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Also Read:ரூ.5.70 லட்சம் என்ற தொடக்க விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 2022 Citroen C3
இதனால் விமான நிலைய ஊழியர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பயண குழப்பத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 11 ஆம் தேதி வரை இரண்டு மாதங்களுக்குப் புறப்படும் மொத்த பயணிகளின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 1,00,00 ஆகக் கட்டுப்படுத்த ஹீத்ரோ விமானநிலையம் முடிவு எடுத்துள்ளது. மேலும் அமெரிக்க விமான நிறுவனங்கள் மே மாதத்திலிருந்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ள நிலையில் இது திட்டமிடப்பட்டத்திலிருந்து 2.7 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவில் நிலவிவரும் மோசமான வானிலை போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாகப் பல விமானங்கள் ரத்து செய்யப்படுவது இதுவே முதன்முறை என்கின்றனர் விமானநிலைய அதிகாரிகள்.
குறிப்பாகத் தொற்றுநோய்களின் போது அமெரிக்க விமான நிறுவனங்களும் ஊழியர்களைக் குறைத்தன, இதனால் 90,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தனர். இருப்பினும், பெரும்பாலான அமெரிக்க கேரியர்கள் - பிக் ஹிட்டர்கள் அமெரிக்கன், யுனைடெட் மற்றும் சவுத்வெஸ்ட் உட்பட உள்நாட்டுப் பயணங்கள் திரும்புவதற்கு ஏற்ப, 2021 ஆம் ஆண்டின் மத்தியில் ஆட்சேர்ப்பைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் இதனை ஊழியர் பற்றாக்குறை சரிசெய்ய முடியாமல் அதிகாரிகள் குழம்பி வருகின்றனர். இதனால் மக்களுக்கு எளிதில் கிடைத்துவரக்கூடிய சேவைகளும் தாமதமாகின்றது.
Also Read:கார் வாங்க நிதியுதவி - டாடா மோட்டார்ஸ் உடன் இணைகிறது இந்தியன் வங்கி!
இதோடு மட்டுமின்றி கொரோனா தொற்று உச்சத்திலிருந்த நிலையில், விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் சுமார் 191,000 ஐரோப்பிய விமானப் பணியாளர்களை பணிநீக்கம் செய்ததோடு ஏப்ரல் 1 மற்றும் ஜூன் 29க்கு இடையில், ஐரோப்பாவின் முதல் 10 மோசமான செயல்திறன் கொண்ட விமான நிலையங்கள் 64,100 விமானங்களை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தற்போது ஐரோப்பிய விமான நிலையங்கள் தீவிர பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கப் போராடி வருகின்றன.
குறிப்பாகக் கடந்த ஜனவரி 2021 ஆம் ஆண்டு ஐரோப்பியப் போக்குவரத்துத் தொழிலாளர் கூட்டமைப்பு வெளியிட்ட ஆய்வின்படி, விமான நிலையத் தரைப் பணியாளர்களில் 58.5 சதவீதம் பேர் அப்போது பணியிலிருந்தனர். அவர்களில் குறைந்தது 23 சதவீதம் பேர் தேவையற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற நடவடிக்கையால் உலகம் முழுவதும் உள்ள விமான பயணிகளிடம் பெரும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flight, Flight travel, Jet Airways