பயனுள்ள அம்சமுடன் கூடிய ஸ்மார்ட் கார் - டெஸ்லா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளி!

டெஸ்லா நிறுவனத்திற்கு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளி

தொழில்நுட்பங்கள் வரலாறு காணாத வளர்ச்சி பெற்றுள்ள தற்போதைய சூழலில், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்பு கடினமாக இருந்த பல விஷயங்கள் மிகவும் எளிமையாக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கையையும் இயல்பு நிலைக்கு திருப்பி வருகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க்கிற்கு, அவரது நிறுவன தயாரிப்பான டெஸ்லா ஸ்மார்ட் காரில் கொடுக்கப்பட்டுள்ள "பயனுள்ள மற்றும் கூல்" அம்சத்திற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

உடலில் ஏற்படும் ஊனத்துடன் கூடிய வாழ்க்கை மிகவும் சவாலானது. ஆனால் தொழில்நுட்பங்கள் வரலாறு காணாத வளர்ச்சி பெற்றுள்ள தற்போதைய சூழலில், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்பு கடினமாக இருந்த பல விஷயங்கள் மிகவும் எளிமையாக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கையையும் இயல்பு நிலைக்கு திருப்பி வருகின்றன.

மாற்றுத்திறனாளி ஒருவர் நிறுத்தி வைத்திருக்கும் காரை ஒட்டி வேறு ஒருவரின் காரோ அல்லது வேறு வாகனமோ, அவரது காரை அணைத்தபடி மிக அருகில் பார்க் செய்து விடும் நிலையில், சக்கர நாற்காலியில் நடமாடும் நபரால் தனது காரை எளிதில் அடைய முடியாமல் போகும். இந்த சிக்கலை தீர்க்க உதவியுள்ளது டெஸ்லா ஸ்மார்ட் கார். இது தொடர்பாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தாமஸ் ஃபோக்டே என்பவர் ட்விட்டரில் 44 வினாடி ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also read... ஸ்மார்ட்போன் டூ எலக்டிரிக் கார் உற்பத்தி - சியோமி மெகா ப்ளான்!

தாமஸ் ஷேர் செய்துள்ள அந்த வீடியோவில் இரண்டு கார்கள் ஒன்றுக்கொன்று இணையாக நிறுத்தப்பட்டுள்ளன. அதில் டெஸ்லா கார் இவருக்கு சொந்தமானது. இவர் காருக்கு அருகில் இருக்கும் சிவப்பு கார், சக்கர நாற்காலியுடன் வரும் இவரை தனது காரை எடுக்க விடமால் தடுத்தபடி இருக்கிறது. மாற்றுத்திறனாளி நபராக இல்லாமல் இருந்தால் 2 கார்களுக்கு நடுவில் இடுக்கு வழியே புகுந்து காரை எடுத்து விட முடியும். ஆனால் தாமஸ் சக்கர நாற்காலியுடன் வாழ்பவர். அவரால் அந்த இடுக்கில் நுழைய முடியவில்லை.சற்று பின்னோக்கி வந்த தாமஸ் தனது ஸ்மார்ட்போனை வெளியே எடுத்து ஸ்வைப் செய்த சில விநாடிகளில், அவரது கார் தானாகவே இருக்கும் இடத்திலிருந்து நேராக ரிவர்ஸில் வெளியே வருகிறது. இணையாக நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கரை தாண்டி ரிவர்ஸில் தாமஸின் டெஸ்லா கார் வந்ததை அடுத்து, அவர் காரின் இருக்கைக்கு செல்ல போதுமான இடம் கிடைத்தது. இதனால் சிக்கலாக இருந்த பார்க்கிங் பிரச்னை நொடிகளில் தீர்ந்தது. இந்த பயனுள்ள மற்றும் அருமையான அம்சத்திற்கு டெஸ்லா நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றி என்று தலைப்பிட்டு இந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார் தாமஸ்.

தாமஸின் இந்த ட்விட் குறுகிய வீடியோ ட்விட்டரில் ஏராளமான லைக்குகள், ரீ ட்வீட் மற்றும் பதில்களுடன் லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்றுள்ளது. எனினும் இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட சிலர் கார் ஹேக் செய்யப்படலாம் அல்லது ஆட்டோ அம்சம் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று கூறினர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: