HOME»NEWS»AUTOMOBILE»man pays rs 1 28 crore to get special license plate as a homage to his grandfather heres why vin ghta
ரூ.1.28 கோடிக்கு நம்பர் பிளேட் வாங்கிய நபர்: வியக்கவைக்கும் காரணம்..
1902ம் ஆண்டில் பர்மிங்காமில் முதன்முதலில் நம்பர் பிளேட்டுக்கள் வழங்கப்பட்ட போது, பத்தாவது நபராக தனது தாத்தா அதனை வாங்கியதாக அந்த நபர் கூறியுள்ளார். அவரது தாத்தாவின் பெயர் சார்லஸ் தாம்சன் மற்றும் அவர் 1874 இல் பிறந்தார். அந்த சமயத்தில் அவர் பர்மிங்காம் பகுதிக்கு எழுதுபொருட்களை விற்கும் ஒரு ஹோல்சேல் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
ஆட்டோ மொபைல்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட நபர்கள் தங்களது வாகனங்களில் ஈர்க்கத்தக்க வகையில் பல்வேறு வேலைப்பாடுகளை மேற்கொள்வர். அது காரின் உட்புறங்களை மறுவேலை செய்வதில் தொடங்கி வாகன வடிவமைப்பில் ஒரு தனித்துவமான உறுப்பைச் சேர்ப்பது வரை ஏதெனும் ஒரு புதிய அம்சத்தை சேர்ப்பர். அதிலும் அவர்கள் விரும்பும் பதிவு எண்ணுடன் ஒரு நம்பர் பிளேட்டை பெறுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் இதற்காக நிறைய பணத்தையும் செலவழிப்பர்.
இதுபோல அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தில், ‘O 10’ என்ற நம்பர் பிளேட்டை பெற நபர் ஒருவர் 1.28 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். இவ்வளவு பெரிய விலைக்கு அந்த பெயர்ப்பலகையை வாங்கியதற்கான காரணம் நம் இதயத்தை உருகச் செய்கிறது. motor1.com-ல் வெளியான ஒரு அறிக்கையின்படி, நம்பர் பிளேட் பெற்ற நபர் அந்த எண்ணுக்கு பின்னால் ஒரு கதை இருப்பதை வெளிப்படுத்தினார்.
1902-ஆம் ஆண்டில் பர்மிங்காமில் முதன்முதலில் நம்பர் பிளேட்டுக்கள் வழங்கப்பட்ட போது, பத்தாவது நபராக தனது தாத்தா அதனை வாங்கியதாக அந்த நபர் கூறியுள்ளார். அவரது தாத்தாவின் பெயர் சார்லஸ் தாம்சன் மற்றும் அவர் 1874 இல் பிறந்தார். அந்த சமயத்தில் அவர் பர்மிங்காம் பகுதிக்கு எழுதுபொருட்களை விற்கும் ஒரு ஹோல்சேல் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
1955 இல் சார்லஸ் காலமான பிறகு, அவரது மகன் பாரி தாம்சனும் கார் மற்றும் நபர் பிளேட்டுகளின் உரிமையாளரானார். பாரி தாம்சனும் தனித்துவமான மற்றும் பிரத்தியேக நம்பர் பிளேட்டின் ரசிகர் ஆவார். வெளிப்படையாக, பாரி தனது மாமாவின் வணிகத்திற்காக மரங்களை விற்கும் போது "O 10" பிளேட்டுகள் காணப்படுவதை விரும்பினார். துரதிர்ஷ்டவசமாக, 2017ல் பாரி உயிரிழந்த பிறகு, உள்ளூர் ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிம நிறுவனம் (DVLA) குடும்பத்தை தக்கவைப்பு சான்றிதழின் கீழ் வைத்திருந்தது.
மேலும் பாரி தனது ஆஸ்டின் A35-கள், மினிஸ், ஃபோர்டு கோர்டினா மற்றும் ஜாகுவார்ஸி போன்ற அனைத்து வாகனங்களிலும் ஒரே நம்பர் பிளேட்டுகளின் தொகுப்பைப் பயன்படுத்தியிருந்தார். அன்றிலிருந்து இந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி வரை நம்பர் பிளேட்டுகள் செயலற்ற நிலையில் இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சில்வர்ஸ்டோன் ஏலத்தில், இந்த தனித்துவமான நம்பர் பிளேட் ரூ.1.28 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சில்வர்ஸ்டோன் ஏலங்கள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளன. அதில் அந்த நம்பர் பிளேட்டுகளை வைத்திருந்தவர்களின் வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அந்த தொகையை செலுத்திய நபரின் பெயரை சில்வர்ஸ்டோன் தனது பதிவில் குறிப்பிடவில்லை.
அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது, “விற்கப்பட்டது! எங்கள் ஆட்டோமொபிலியா விற்பனை நடந்து வருகிறது, பதிவு எண் 'O 10' 1902 க்குப் பிறகு முதல் முறையாக சந்தைக்கு வந்துள்ளது. மேலும் 128,800 டாலர்களுக்கு விற்கப்பட்டது! ”என பதிவிட்டுள்ளது. தனது தாத்தாவின் நினைவாகவும், அவருக்கு மரியாதையை செலுத்தவும் அந்த நபர் இவ்வளவு விலை கொடுத்து அந்த நபர் பிளேட்டுகளை வாங்கியுள்ளது பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.