கொல்கத்தாவில் தொடங்கிய பெண்களுக்கான 'பிங்க் கேப்(Cabs)’ சேவை!

மேற்கு வங்கத்தில் பெண் வாகன ஓட்டிகளுக்கான மானியத்தை ’கதிதாரா திட்டம்’ மூலம் 1 லட்சம் ரூபாயிலிருந்து 1.5 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தியுள்ளார் மம்தா.

Web Desk | news18
Updated: February 21, 2019, 11:37 AM IST
கொல்கத்தாவில் தொடங்கிய பெண்களுக்கான 'பிங்க் கேப்(Cabs)’ சேவை!
(Image: Twitter/Mamata Banerjee)
Web Desk | news18
Updated: February 21, 2019, 11:37 AM IST
பெண்களுக்காக பெண்களால் மட்டுமே இயக்கப்படும் ‘பிங்க் கேப்(cab)’ சேவையை கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.

ஆப் மூலம் வழக்கமான கேப்(cab) பதிவு செய்யும் முறை தான் ‘பிங்க் கேப்’ சேவையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் பிங்க் நிற வாகனங்கள் முற்றிலும் பெண்களுக்காக மட்டும் பெண்களால் இயக்கப்படும் சேவை ஆகும். முதற்கட்டமாக 10 கார்களை பத்து பெண்களின் பொறுப்பில் ஒப்படைத்த முதல்வர் மம்தா பானர்ஜி, “பெண்கள் ஓட்டுநர் சீட்டை நோக்கியும் முன்னேற வேண்டியதற்கான ஊக்கம் இது” எனக் கூறினார்.

மேலும் மேற்கு வங்கத்தில் பெண் வாகன ஓட்டிகளுக்கான மானியத்தை ’கதிதாரா திட்டம்’ மூலம் 1 லட்சம் ரூபாயிலிருந்து 1.5 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தியுள்ளார் மம்தா. கதிதாரா திட்டம் என்பது இளைஞர்களுக்கு போக்குவரத்துத் துறை மூலம் சுயமாக வாகனங்கள் வாங்கி தொழில் செய்ய ஊக்குவிக்கும் மாநில அரசின் திட்டமாகும்.

மேற்கு வங்க மாநிலத்திலும் எலெக்டெரிக் வாகனங்களை உபயோகப்படுத்த மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு - சவுதி இளவரசர்
First published: February 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...