2 புதிய பைக்குகளை அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ!

2 புதிய பைக்குகளை அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ!
பிஎம்டபிள்யூ ஜி310-ஆர் மற்றும் ஜி310-ஜிஎஸ்
  • News18
  • Last Updated: July 18, 2018, 4:29 PM IST
  • Share this:
சொகுசு கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம் 2 புதிய பைக்குகளை  இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ ஜி310-ஆர் மற்றும் ஜி310-ஜிஎஸ் ஆகிய பைக்குளை  இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை பிஎம்டபிள்யூ கார்களை விரும்பாதவர்களே கிடையாது. கார் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனம் பைக்குகளையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது பிஎம்டபிள்யூ ஜி310-ஆர் மற்றும் ஜி310-ஜிஎஸ் என்ற இரண்டு புதிய பைக்குகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய நிறுவனமான டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த இரு பைக்குகளையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த பைக்குகள் டிவிஎஸ்-ன் ஓசுர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் பிஎம்டபிள்யூ பைக்குகளாக பிஎம்டபிள்யூ ஜி 10-ஆர் மற்றும் ஜி 310-ஜிஎஸ் இருக்கும்.
Loading...

பிஎம்டபிள்யூ ஜி310-ஆர் மற்றும் ஜி310-ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குகளும் 313 சிசி லிக்யூட் கூல் இன்ஜின் கொண்டவை. 6 கியர்களை கொண்ட இந்த பைக்குகள் 34 ஹெச்பி திறன் கொண்டவை. பிரேக்கிங்கை பொறுத்தவரை ஏபிஎஸ் வசதியோடு 5 ஸ்போக்ஸ் அலாய் வீலுடன் இந்த இரு பைக்குகளும் விற்பனைக்கு வரவுள்ளன.

பிஎம்டபிள்யூ  ஜி310-ஆர் மற்றும்  ஜி 310-ஜி.எஸ் பைக்குகள் ஸ்டைல் ஹெச்பி, காஸ்மிக் பிளாக் மற்றும் ரேஸிங் ரெட் என 3 வண்ணங்களில் கிடைக்கும். இந்த இரு பைக்குகளும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதை தொடர்ந்து, பிஎம்டபிள்யூ நிறுவனம் பைக்குகள் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஜெர்மனி, தாய்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் பிஎம்டபிள்யூ நிறுவனம் பைக்குகள் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் விலை ₹2.99 லட்சம் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310-ஜிஎஸ்-ன் விலை ₹3.49 லட்சம்.
First published: July 18, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...