• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • இனி கார்களில் 6 ஏர்பேக்குகள் ஸ்டேண்டர்ட் அம்சமாக கிடைக்குமா? : மத்திய அரசின் அடுத்த பிளான்!

இனி கார்களில் 6 ஏர்பேக்குகள் ஸ்டேண்டர்ட் அம்சமாக கிடைக்குமா? : மத்திய அரசின் அடுத்த பிளான்!

air bags

air bags

பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, வாகனத்தின் அனைத்து வேரியன்ட்கள் மற்றும் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்ஸ்ளை கட்டாயமாக வழங்குமாறு அனைத்து தனியார் வாகன உற்பத்தியாளர்களுக்கும் தாம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
சமீபத்தில் டூயல் ஏர்பேக்குகளை கட்டாயமாக்கி அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், நாட்டில் இருக்கும் அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் (automakers) தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு மாடலின் அனைத்து வேரியன்ட்களிலும் குறைந்தபட்சம் தரமான ஆறு ஏர்பேக்குகளை (airbags) வழங்குமாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தி உள்ளார்.

தனியார், வர்த்தக மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகளின் குழுவை சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சந்தித்தார். வாகன பொறியியலில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களை இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பாராட்டினார்.

Also Read:  ரவி தாஹியாவின் ஒலிம்பிக் பதக்கத்தால் திகார் சிறையில் உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்..

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சொசைட்டியுடன் (Society of Indian Automobile Manufacturers - SIAM) நடைபெற்ற இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் விற்பனைக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் தரமான பாதுகாப்பு அம்சமாக அதிக ஏர்பேக்குகளை சேர்ப்பது மற்றும் வரும் ஆண்டில் ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனங்களை (flex-fuel vehicles -FFV)அறிமுகப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக ட்விட் ஒன்றை வெளியிட்ட நிதின் கட்கரி, அதில் "ஒரு வருட காலத்திற்குள் 100% எத்தனால் மற்றும் பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்ட ஃப்ளெக்ஸ்-எரிபொருள் வாகனங்களை (FFVs) விரைவாக விற்பனைக்கு கொண்டு வருவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, வாகனத்தின் அனைத்து வேரியன்ட்கள் மற்றும் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்ஸ்ளை கட்டாயமாக வழங்குமாறு அனைத்து தனியார் வாகன உற்பத்தியாளர்களுக்கும் தாம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

Also Read:  ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்!

மத்திய அமைச்சருடனான சந்திப்பின் போது SIAM பிரதிநிதிகள் ஆட்டோ இண்டஸ்ட்ரியின் நிலை குறித்த புதுப்பிப்பை வழங்கினர் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான OBD விதிமுறைகள் போன்ற BS-6 ஃபேஸ் 2, CAF ஃபேஸ் 2 போன்ற மாசு சார்ந்த விதிகளை சிறிது காலம் ஒத்திவைக்க கோரினர். இதனிடையே சில வாரங்களுக்கு முன் பேசும் போது அரசு ஒரு சாத்தியமான போக்குவரத்து எரிபொருளாக பசுமை ஹைட்ரஜனை (green hydrogen) பயன்படுத்துவது பற்றிய வாய்ப்புகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு என்ன சலுகைகளை வழங்கி வருகிறதோ, அதே அளவிலான சலுகைகளை பசுமை ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தி இயங்க கூடிய வாகனகங்ளுக்கும் வழங்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். பசுமை ஹைட்ரஜனை ஆதரிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கூறியுள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அமைப்புடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: