இந்திய ‘ஆட்டோ எக்ஸ்போ’வில் பங்கேற்கப்போவதில்லை- வீழ்ச்சியால் விலகும் முன்னணி நிறுவனங்கள்!

துறை வீழ்ச்சி, பாரத் ஸ்டேஜ் VI மாற்றம் ஆகிய காரணங்களை முதன்மையானதாக இந்நிறுவனங்கள் முன்வைத்துள்ளன.

இந்திய ‘ஆட்டோ எக்ஸ்போ’வில் பங்கேற்கப்போவதில்லை- வீழ்ச்சியால் விலகும் முன்னணி நிறுவனங்கள்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: October 14, 2019, 8:01 PM IST
  • Share this:
வருகிற ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கப்போவதில்லை என முன்னனி கார் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தொடர்ந்து 11-வது மாதமாக இந்திய ஆட்டோமொபைல் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. வருகிற 2020-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடக்க உள்ள ஆட்டோ எக்ஸ்போ என்னும் மோட்டார் வாகனங்களுக்கான கண்காட்சி நடக்கிறது. வீழ்ச்சியால் இந்த கண்காட்சி நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என முன்னனி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கண்காட்சியில் பங்கேற்க செலவிடும் தொகை என்பது தற்போதைய சூழலில் அநாவசிய செலவு என்பது போன்றே நிறுவனங்கள் காரணம் சொல்லி வருகின்றன. ஹீரோ மோட்டார்கார்ப், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஹோண்டா கார்ஸ், ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ், டொயோட்டா, பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்க மறுத்துள்ளன.


துறை வீழ்ச்சி, பாரத் ஸ்டேஜ் VI மாற்றம் ஆகிய காரணங்களை முதன்மையானதாக இந்நிறுவனங்கள் முன்வைத்துள்ளன. ஆனால், சில முக்கிய நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்க முன்வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, மஹிந்திரா, ஹூண்டாய், கியா, எம்ஜி, ரெனாட், மெர்சிடிஸ், ஸ்கோடா, வோக்ஸ்வேகன், ஜேபிஎம், ஐசுஸு ஆகிய நிறுவனங்கள் பங்கேற்பது உறுதி ஆகியுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் பார்க்க: ஹெக்டார் இரண்டாம் கட்ட முன்பதிவுக் காலம்...அதீத வரவேற்பால் திணறும் MG மோட்டார்ஸ்

தீபாவளி புக்கிங்: ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை
First published: October 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading