முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / XUV 700 காரை வாங்க 1.5 லட்சம் பேர் முன்பதிவு - தட்டி தூக்கிய மஹிந்திரா

XUV 700 காரை வாங்க 1.5 லட்சம் பேர் முன்பதிவு - தட்டி தூக்கிய மஹிந்திரா

SUV ரக கார்

SUV ரக கார்

இந்தியாவில் உள்ள முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. இந்த நிறுவனம் SUV ரக கார்களுக்கு பெயர் பெற்ற ஓர் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் XUV 500, தார், ஸ்கார்பியோ, பொலேரோ போன்ற SUV ரக கார்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமான SUV கார்களில் ஒன்றாக உள்ளன.

மேலும் படிக்கவும் ...

இந்தியாவில் உள்ள முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. இந்த நிறுவனம் SUV ரக கார்களுக்கு பெயர் பெற்ற ஓர் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் XUV 500, தார், ஸ்கார்பியோ, பொலேரோ போன்ற SUV ரக கார்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமான SUV கார்களில் ஒன்றாக உள்ளன.

அப்படி அதன் மிகவும் பிரபலமான XUV 500 காரின் மேம்படுத்தப்பட்ட மாடலாக பலதரப்பட்ட டெக்னாலஜி மற்றும் வசதிகளுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட XUV 700 கார் மக்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

வெறும் 11 மாதங்களுக்குள்ளாகவே இந்த காரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் ஆர்டர் செய்துள்ளனர். குறிப்பாக இந்த காரில் உள்ள டெக்னாலஜி மற்றும் பாதுகாப்பு வசதிகள் இந்திய மக்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். இதனாலேயே இந்த காரை இதுவரை 1.5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த காரின் அறிமுக விலை 11 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் ஆக இருந்தது. கடந்த ஒரு ஆண்டில் விலையேற்றம் காரணமாக இந்த காரின் தற்போதைய ஷோரூம் விலை 13 லட்சத்து 18 ஆயிரம் ஆக உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 25 ஆயிரம் முன்பதிவுகள் பெற்ற கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜூன் வரை 40,000 SUV 700 கார்கள் விற்றிருக்கின்றன. மேலும் ஒரு லட்சம் பேர் இந்த காருக்காக காத்திருக்கின்றனர் என்பதும் முக்கியமானது.

ALSO READ | Pay-as-you-drive வாகன இன்சூரன்ஸ் திட்டம் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்த 3 ரோ SUV காரை நாம் பெறவேண்டுமானால் குறைந்தது 1.5 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். அந்த அளவிற்கு அதிக டிமாண்ட் கொண்ட காராக இந்த கார் உள்ளது. மூலப்பொருள் மற்றும் பாகங்கள் விநியோகம் காரணமாக திணறி வரும் மஹிந்திரா நிறுவனம் இந்த காரை வாடிக்கையாளர்களுக்கு தங்களால் முடிந்த அளவிற்கு விரைவாக உற்பத்தி செய்து டெலிவரி செய்துவருகின்றன.

இதுகுறித்து மஹிந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் ஆட்டோமேட்டிவ் பிரிவு தலைவர் விஜய் நக்ரா, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப கார்களை டெலிவரி செய்வது சவாலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களின் காத்திருப்பு காலத்திற்கு ஏற்ப இந்த கார்கள் மிகவும் தரமானதாக இருக்கும் என்றும், அதே நேரம் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டாட்டா safari, எம் ஜி ஹெக்டார் பிளஸ் kia நிறுவனத்தின் carens ஆகிய மாடல்களுக்கு இணையானதாக இந்த கார் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Anand Mahindra, Mahindra