• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • புக்கிங் ஓபன் செய்யப்பட்ட 1 மணி நேரத்திற்குள் விற்று தீர்ந்த 25,000 யூனிட் மஹிந்திரா XUV700 - அதிரடி விலை உயர்வு!

புக்கிங் ஓபன் செய்யப்பட்ட 1 மணி நேரத்திற்குள் விற்று தீர்ந்த 25,000 யூனிட் மஹிந்திரா XUV700 - அதிரடி விலை உயர்வு!

மஹிந்திரா XUV700

மஹிந்திரா XUV700

புதுப்பிக்கப்பட்ட விலை அதிகரிப்பின் அடிப்படையில் ட்ரிம், எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் கலவையைப் பொறுத்து MX முதல் AX7 வரையிலான அனைத்து வேரியன்ட்களின் விலையும் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

  • Share this:
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தனது புதிய XUV 700 காருக்கான புக்கிங்கை ஓபன் செய்த 1 மணி நேரத்திற்குள், சுமார் 25,000 புக்கிங்களை பெற்று உள்ளதாக தகவல் தெரிவித்து இருக்கிறது. இந்த புக்கிங் எண்ணிக்கை வேரியன்ட்டை பொறுத்து அடுத்த 6 மாதங்கள் வரையிலான உற்பத்தியை பிரதிபலிப்பதாகவும் மஹிந்திரா நிறுவனம் கூறி இருக்கிறது. தீபாவளிக்குள் புக்கிங் டெலிவரி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி Veejay Nakra இது பற்றி கூறுகையில், ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அதாவது சுமார் 57 நிமிடங்களில் XUV700, 25,000 யூனிட் விற்று தீர்ந்துள்ளது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பு எங்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப எங்களது தயாரிப்பு சிறப்பாக வெளிவரும் என்றார்.

இதனிடையே மஹிந்திரா நிறுவனம் அடுத்த 25,000 யூனிட்டுகளுக்கான புக்கிங்கை இன்று காலை 10 மணிக்கு மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், Mahindra XUV700 காருக்கு நிறுவனம் அறிவித்திருந்த அறிமுக விலை முதல் 25,000 யூனிட்களுக்கு மட்டுமே. நிறுவனத்தின் அறிவிப்பின்படி இவை அனைத்தும் தற்போது புக் செய்யப்பட்டு விட்டன. எனவே இந்த காருக்கான அறிமுக விலைகள் இனி பொருந்தாது.

Also read... அறிமுகமான 1 வருடத்திலேயே புதிய புக்கிங் மைல்கல்லை எட்டிய Mahindra Thar SUV!

புதுப்பிக்கப்பட்ட விலை அதிகரிப்பின் அடிப்படையில் ட்ரிம், எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் கலவையைப் பொறுத்து MX முதல் AX7 வரையிலான அனைத்து வேரியன்ட்களின் விலையும் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. AX7 லக்ஸரி பேக் பொருத்தப்பட்ட மாடல்களுக்கான விலை ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. டாப்-ஸ்பெக் AX7 டீசல்-ஆட்டோமேட்டிக் AWD ட்ரிம் தவிர மற்ற அனைத்தின் விலையும் ரூ.30,000 உயர்த்தப்பட்டுள்ளது.

என்ட்ரி லெவல் யூனிட்டிற்கான எக்ஸ் ஷோரூம் விலை முதல் முறை புக்கிங்கின் போது ரூ.11.99 லட்சம் எ ன்று இருந்த நிலையில், இன்றைய புக்கிங்கின் போது புதிய Mahindra XUV700 என்ட்ரி லெவல் வேரியன்ட் காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.12.49 லட்சம் என்பது குறிப்பிடதக்கது.

இது தவிர தற்போது ஓபனில் உள்ள புக்கிங் செஷனின் போது புக் செய்யப்பட்ட உள்ள 25,000 யூனிட்டிற்கு பிறகு, Mahindra XUV700 காரின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படும் என்று மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் செய்தி குறிப்பு ஒன்றில் தகவல் தெரிவித்துள்ளது. Mahindra XUV700 காரின் டாப்-வேரியன்ட் ஆட்டோ பூஸ்டர் ஹெட்லேம்ப்ஸ், பர்ஸ்னலைஸ்டு சேஃப்டி அலெர்ட்ஸ், ஸ்மார்ட் டோர் ஹேண்டில்ஸ்,டிரைவர் ட்ரவுஸினஸ் டிடெக்ஷன், ADAS, 360 டிகிரி வியூவுடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களுடன் வர உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: