ஒலிம்பிக் 2020 மற்றும் பாராலிம்பிக்ஸ் 2020 ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு புதிய XUV700 ஜாவெலின் வாகனத்தை பரிசாக வழங்க இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா முடிவு செய்துள்ளது. போட்டிகளில் தங்கம் வெற்ற வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் இந்த புதிய வாகனத்தை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆட்டோ மற்றும் ஃபார்ம் டெபார்ட்மெட்டின் தலைமை வடிவமைப்பு அதிகாரி பிரதாப் போஸ் வடிவமைக்க உள்ளார். இந்த செய்தியை பிரதாப் தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ரஷ்லேன் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்திய வாகன உற்பத்தி நிறுவனமான
மஹிந்திரா 'ஜாவெலின்' என்ற பெயரை வாகன வர்த்தகத்தில் முத்திரை பதித்துள்ளது. ஆனால் இப்போது வரை XUV700 ஜாவெலின் வாகனம் பற்றிய ஸ்பெசிபிகேஷன்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த ஸ்பெஷல் வெர்ஷனான XUV700 எப்படி சாதாரண XUV700-இலிருந்து வேறுபடுகிறது என்பது பற்றியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இருப்பினும், இந்த கார்கள் வெளிப்புறத்தில் ஒரு சிறப்பு வசதியை கொண்டிருக்கும் என்று மணிகன்ட்ரோல் வெப்சைட் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு வழங்கப்படும் கார்களில், வீரர்களின் சிறப்புத் தேவைகளுக்கு ஏற்ப உட்புறங்கள் திருத்தி அமைக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்தை வென்று வீட்டிற்கு கொண்டு வந்த இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இந்த ஸ்பெஷல் வெர்ஷனின் முதல் வாகனம் பரிசாக வழங்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீப காலமாக விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஆனந்த் மஹிந்திரா பல பரிசுகளை வழங்கி வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய அணி வென்ற பிறகு மகேந்திரா நிறுவனம் தனது தார் எஸ்யூவியை கிரிக்கெட் வீரர்கள் முகமது சிராஜ், சுப்மான் கில், டி நடராஜன், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு பரிசளித்தது.
Also read... கோளாறு: 1.81 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது மாருதி நிறுவனம்!
இதனிடையே, XUV700 வாகனத்தின் விலை ரூ.11.99 லட்சத்தில் இருந்து தொடங்கும் என்று இந்திய வாகன தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாதத்தின் பிற்பகுதியில் இந்த புதிய எஸ்யூவி இந்திய ஷோரூம்களுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. XUV700 வாகனத்தின் ஸ்டாண்டர்ட் வெர்ஷன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் மோட்டார் வகைகளில் வழங்கப்படுகிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 200 ஹெச்பி பவரையும், 380 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. அதுவே டீசல் ஆயில் பர்னர் 155 ஹெச்பி பவரையும், 360 என்எம் பீக் டார்க்கையும் உருவாகும் திறன் கொண்டது. காரின் எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.