• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 24 மணிநேரத்தில் 4,384 கிமீ... வேகத்தில் சாதனை படைத்த மகிந்திரா எக்ஸ்.யூ.வி 700!

24 மணிநேரத்தில் 4,384 கிமீ... வேகத்தில் சாதனை படைத்த மகிந்திரா எக்ஸ்.யூ.வி 700!

Mahindra Xuv 700

Mahindra Xuv 700

2016ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சாதனையை, சுமார் 5 ஆண்டுகளுக்கு பின், மகிந்திரா எக்ஸ்யூவி 700 தற்போது தகர்த்துள்ளது.

  • Share this:
மகிந்திரா எக்ஸ்யூவி 700 கார் ஸ்பீடு டெஸ்ட்டில் முந்தைய சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்துள்ளது.

சென்னைக்கு அருகே உள்ள மகிந்திரா நிறுவனத்தின் புதிய எஸ்யூவி ப்ரூவிங் டிராக்கில் (Mahindra SUV Proving Track - MSPT) 24 மணி நேர ஸ்பீடு எண்டூரன்ஸ் சேலஞ்ச் (24 hours Speed Endurance Challenge) போட்டி நடைபெற்றது. சவாலான இந்தப் போட்டியில் மகிந்திரா நிறுவனத்தின் எஸ்.யூ.வி மாடலைச் சேர்ந்த 4 கார்கள் கலந்து கொண்டன. ஸ்பீடு டெஸ்டுக்காக நடத்தப்பட்ட இப்போட்டியில், ஒவ்வொரு காரும் மின்னல் வேகத்தில் பறந்தன.

24 மணி நேர நேரக்கணக்கீட்டின் அடிப்படையில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை கடக்குமாறு நடத்தப்பட்ட இப்போட்டியில் மகிந்திரா எக்ஸ்.யூ.வி 700 காரின் டீசல் வேரியண்ட் முதல் இடத்தைப் பிடித்தது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாடல்களும் 4 ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்திருந்தாலும், எக்ஸ்.யூ.வி 700 டீசல் வேரியண்ட் அதிகபட்சமாக 4,384.73 கிலோ மீட்டர் தொலைவை கடந்து கம்பீரமாக முதல் இடத்தில் இருந்தது. டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 4,256.12 கிலோ மீட்டர்களும், பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் 4,232.01 கிலோ மீட்டர்களும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 4,155.65 கிலோ மீட்டர் தொலைவும் பயணித்தன.

Also Read: அக்டோபர் 15 முதல் விற்பனைக்கு வரும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 – ரூ.3,000 கேஷ்பேக் ஆஃபர் அறிவிப்பு!

இதற்கு முன்பு 3,161 கிலோ மீட்டர் கடந்தது மட்டுமே சாதனையாக இருந்தது. கடந்த 2016ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை, சுமார் 5 ஆண்டுகளுக்கு பின், மஹிந்திரா எக்ஸ்யூவி700 தற்போது தகர்த்துள்ளது. இவை தவிர ஸ்பீடு டெஸ்டில் படைக்கப்பட்டிருந்த 80க்கும் மேற்பட்ட மற்ற சாதனைகளையும் இந்தக் கார் முறியடித்துள்ளது. போட்டியின்போது மகேந்திரா எக்ஸ்.யூ.வி 700 கார்கள் சராசரியாக மணிக்கு 170 - 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கண்காணிப்பில் கீழ் கடுமையான விதிமுறைகளுக்குட்பட்டு ஸ்பீடு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது. சாதனையை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் குழுவினரும் அங்கிருந்து கண்காணித்தனர். டிரைவர்களை மாற்றவும், எரிபொருள் நிரப்பவும் மிகக் குறைவான நேரம் மட்டுமே கார்கள் நிறுத்தப்பட்டன. இந்தக் கார்களை டிரைவிங்கில் நிபுணத்தும் பெற்றவர்கள் இயக்கினர். ஒரே குழுமத்துக்குள் நடைபெற்ற போட்டியாக இருந்தாலும், மகிந்திரா எக்ஸ்.யூ.வி 700 கார் தன்னுடைய கம்பீரத்தை நிரூபித்துள்ளது.

Also Read:  உலகின் சிறந்த 750 நிறுவனங்களில் இந்தியாவில் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ்!

மகிந்திரா எக்ஸ்.யூ.வி டிசைன் மற்றும் பவர்புல் என்ஜின்கள், அந்த கார்களுக்கு கண்கவர் லுக்கை கொடுக்கிறது. இது வாடிக்கையாளர் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. 24 மணி நேரத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புக்கிங்குகளைப் பெற்று சாதனையும் படைத்துள்ளது. வாடிக்கையாளர்கள், மகிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யூ.வி 700 பிராண்டின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டுவதாக அந்நிறுவனம் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: