முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிமீ ஓடும் திறன் கொண்ட மஹிந்திரா-வின் XUV400 எலெக்ட்ரிக் - எப்போது விற்பனைக்கு வரும்.?

ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிமீ ஓடும் திறன் கொண்ட மஹிந்திரா-வின் XUV400 எலெக்ட்ரிக் - எப்போது விற்பனைக்கு வரும்.?

400

400

Mahindra XUV400 Electric SUV | இந்தியாவின் உள்நாட்டு வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி-யான Mahindra XUV400 Electric காரை பற்றிய தகவல்களை வெளிப்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட eXUV300 கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்ட Mahindra XUV400 Electric, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் SUV பற்றி வரும் ஜனவரி 2023-ல் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக தற்போது வெளிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் SUV-ஆன Mahindra XUV400, 456 கிமீ டிரைவிங் ரேஞ்ச் தரும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது.

டிசம்பர் 2022 முதல் 16 நகரங்களில் முதல் கட்டமாக டெமோ வாகனங்களுடன் இந்த எலெக்ட்ரிக் காருக்கான டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கும் என மஹிந்திரா நிறுவனம் கூறி இருக்கிறது. மேலும் வரும் ஜனவரி 2023-ன் இறுதியில் இந்த காரின் டெலிவரி தொடங்கும். இந்த எலெக்ட்ரிக் SUV உடன் சார்ஜர் விருப்பங்களை வழங்குவதோடு, இந்தியா முழுவதும் வேகமாக சார்ஜிங் நெட்வொர்க்கை அமைக்கும் வேலையிலும் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த எலெக்ட்ரிக் SUV-யின் விலை ஜனவரி 2023-ல் அறிவிக்கப்படும். இந்த எலெக்ட்ரிக் SUV 4200 மிமீ நீளம் மற்றும் 1821 மிமீ அகலம் கொண்டதாக இருக்கும். இந்த கார் சிறந்த இன்-கிளாஸ் வீல்பேஸ் மற்றும் 2600 மிமீ மற்றும் 378 லிட்டர் பூட் கெப்பாசிட்டியுடன் வருகிறது. மேலும் புதிய வெண்கல நிறத்தில் 'Twin Peaks' லோகோவை மையத்தில் கொண்ட முதல் மஹிந்திரா எலெக்ட்ரிக் மாடல் இதுவாகும்.

மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் கலர் ஆப்ஷன்கள்:

காப்பர் ஃபினிஷில் டூயல் டோன் ரூஃப் ஆப்ஷனுடன் ஆர்க்டிக் ப்ளூ, எவரெஸ்ட் ஒயிட், கேலக்ஸி கிரே, நாபோலி பிளாக் மற்றும் இன்பினிட்டி ப்ளூ உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் இந்த எலெக்ட்ரிக் SUV வெளியிடப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

Also Read : உலகிலேயே மிகவும் எடை குறைந்த ஹெல்மெட் அறிமுகம்... எடை எவ்வளவு தெரியுமா?

செயல்திறன் & ரேஞ்ச்:

மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் காரானது நான்-லக்ஸரி செக்மென்ட்டில் அதிவேக ஆக்ஸலரேஷன் கொண்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். ஏனெனில் இது வெறும் 8.3 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டுகிறது. இந்த காரின் டாப் ஸ்பீட் மணிக்கு 150kmph ஆகும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் Indian driving cycle standards படி 456 கிலோமீட்டர் எலெக்ட்ரிக் ரேஞ்சை வழங்குகிறது. Li-ion செல்களைப் பயன்படுத்தும் 39.4kW பேட்டரி பேக்குடன் வரும் இந்த காரை 0kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சுமார் 50 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 80% சார்ஜாகி விடும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரம் 7.2 kW/32A அவுட்லெட் வழியாக சார்ஜ் செய்யும் போது, 0-100% சார்ஜ் செய்ய ஆறரை மணி நேரம் ஆகும். ஸ்டான்டர்ட் 3.3 kW/16A டொமஸ்டிக் சாக்கெட்டை பயன்படுத்தி சார்ஜ் செய்தால் முழுவதுமாக சார்ஜ் செய்தால் 13 மணி நேரமாகும்.

Also Read : ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.22 கோடி மதிப்புள்ளதாக மாறிய நானோ கார்.? எப்படி தெரியுமா.? 

முதல் கட்டமாக வரும் ஜனவரி 2023-ல் மும்பை, ஹைதராபாத், டெல்லி NCR, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, புனே, அகமதாபாத், கோவா, ஜெய்ப்பூர், சூரத், நாக்பூர், திருவனந்தபுரம், நாசிக், சண்டிகர், கொச்சி உள்ளிட்ட 16 நகரங்களில் மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Automatic car, Electric car, Mahindra, Suv car