முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / 16 லட்சத்தில் அறிமுகமான மஹிந்திரா XUV 400 எலெக்ட்ரிக் கார்கள் : தொடங்கியது முன்பதிவு!

16 லட்சத்தில் அறிமுகமான மஹிந்திரா XUV 400 எலெக்ட்ரிக் கார்கள் : தொடங்கியது முன்பதிவு!

மஹிந்திரா XUV 400 எலெக்ட்ரிக் கார்

மஹிந்திரா XUV 400 எலெக்ட்ரிக் கார்

Mahindra XUV 400 Booking start : டாடாவின் SUV எலெக்ட்ரிக் காரான டாடா நெக்சானுக்கு போட்டியாக மஹிந்திரா XUV 400-எலெக்ட்ரிக் காரை களமிறக்கியுள்ளது மஹிந்திரா நிறுவனம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாடிக்கையாளர்களின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மஹிந்திரா XUV 400 எலெக்ட்ரிக் கார்களின் புக்கிங் தொடங்கியுள்ளது. தொடக்க விலையாக ரூ.15.99 லட்சத்தில் புக்கிங் ஆரம்பித்துள்ளது. https://booking.mahindra.com/ என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்யலாம்.

எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை அதிகப்படுத்த அரசு ஊக்குவிக்கிறது. மேலும் அந்த வகை கார்களுக்கு சந்தையில் பெரும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. எலெக்ட்ரிக் கார்களின் பல மாடல்களில் வெளிவருகிறது. அந்த வகையில் தற்போது எலெக்ட்ரிக் SUV கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

அதன் அடிப்படையில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் SUV ரக கார்களை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது மஹிந்திரா XUV 400 எலக்ட்ரிக் கார்.

வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த எலெக்ட்ரிக் காரான மஹிந்திரா XUV 400-ன் விலை சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் 74 ஆவது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று முதல் மஹிந்திரா XUV 400 எலெக்ட்ரிக் காரின் முன்பதிவு தொடங்கியுள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, மஹிந்திரா XUV 400 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இது ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் மஹிந்திரா XUV 300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் தான். புத்தம் புதிய XUV 400 எலெக்ட்ரிக் காரில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்ய கூடிய மற்றும் மடித்து வைத்து கொள்ள கூடிய ரியர்வியூ மிர்ரர்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான டிரைவர் இருக்கை, 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் 60/40 ஸ்பிளிட் இருக்கைகள் என ஏராளமான வசதிகள் இருக்கின்றன.

பாதுகாப்பு அம்சத்திலும் குறைவைக்கவில்லை . 6 ஏர் பேக்குகள் மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும் கொண்டுள்ளது மஹிந்திரா XUV 400 எலெக்ட்ரிக் கார். எனவே பாதுகாப்பான ஒரு எலெக்ட்ரிக் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு மஹிந்திரா XUV 400 எலெக்ட்ரிக் கார் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

EC மற்றும் EL என மொத்தம் 2 வேரியண்ட்களில் மஹிந்திரா XUV 400 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் EC வேரியண்ட்டில் 34.5 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் EL வேரியண்ட்டில் 39.4 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், EC வேரியண்ட்டின் ரேஞ்ச் 375 கிலோ மீட்டர்கள் எனவும், EL வேரியண்ட்டின் ரேஞ்ச் 456 கிலோ மீட்டர்கள் எனவும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read : ஒரு முறை சார்ஜ் செய்தால் 40 கி.மீ பயணம்.. அசத்தலாக அறிமுகமான அதிநவீன இ-சைக்கிள்

போட்டி நிறுவனங்களுக்கு சவால் அளிக்க கூடிய விலையையும் மஹிந்திரா நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது ஒரு சிறப்பம்சம். மஹிந்திரா XUV 400 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 15.99 லட்ச ரூபாய் மட்டும்தான். அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டான EL வேரியண்ட்டின் விலை 18.99 லட்ச ரூபாய் ஆகும். இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இது அறிமுக சலுகை விலை மட்டும் தான். முதலில் முன்பதிவு செய்யும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த விலை. அதன் பிறகு விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே குறைவான விலையில் வாங்க வேண்டும் என்பதற்காக வாடிக்கையாளர்கள் பலரும் போட்டி போட்டு கொண்டு மஹிந்திரா XUV 400 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து வருகின்றனர்.

திறன், ஃப்யூச்சர்கள், வேரியண்டஸ், லுக் அண்ட் ஸ்டைல் முக்கியமாக விலை என அனைத்திலும் மஹிந்திரா XUV 400 எலக்ட்ரிக் கார் டாடாவின் நெக்சானுக்கு சரியான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர்: ரொசாரியோ ராய்

First published:

Tags: Car, Electric car, Electric Cars, Mahindra