இந்திய சந்தையில் புத்தம் புதிய எஸ்யூவி கார் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத் தயாரிப்பு பிரிவில் இந்த காருக்கு Z101 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய எஸ்யூவி கார் தான் தற்போதைய கார்களில் மிகப் பெரியதாக இருக்கப் போகிறது என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது. அதாவது Big Daddy of SUVs என்று இந்தக் கார் வரையறை செய்யப்படுகிறது.
மும்பையில் உள்ள மஹிந்திரா இந்தியா டிசைன் ஸ்டுடியோ சார்பில் இந்த கார் டிசைன் செய்யப்பட்டது என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து, சென்னை அருகே உலக தரத்திலான வசதிகளுடன் அமைந்துள்ள மஹிந்திரா ரிசர்ச் வேலி நிறுவனத்தில் அந்தக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய கார் குறித்த டீசர் வீடியோ ஒன்றை மஹிந்திரா நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதில், அந்தக் காரை தயாரிப்பதில் ஊழியர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பது குறித்து பாராட்டும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
விளம்பரத்திற்கு அமிதாப் பச்சன்
மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட டீசர் வீடியோவில் பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் வாய்ஸ் இடம்பெற்றிருந்தது. இதேபோன்று புதிய காருக்கான புரோமோஷனல் வீடியோக்களிலும் அவரது வாய்ஸ் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள உலகத் தரத்திலான மஹிந்திரா எஸ்யூவி கார் தயாரிப்பு ஆலையில் அந்தக் கார் எப்படி தயார் செய்யப்படுகிறது என்பதை விளக்குவதாக டீசர் வீடியோ அமைந்துள்ளது.
ஸ்கார்பியோவின் அடுத்த வடிவம்
புதிதாக வர உள்ள எஸ்யூவி காரில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது குறித்து மஹிந்திரா நிறுவனம் எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், நீண்ட காலமாக மேம்பாட்டு நிலையில் இருக்கும் ஸ்கார்பியோ காரின் அடுத்த ஜெனரேஷன் வடிவமாக புதிய கார் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
Also Read : டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள 5 எஸ்யூவி மாடல் கார்கள் இதோ!
கர்வ் டிசைன்
தற்போதைய ஸ்கார்பியோ கார் டிசைனை ஒப்பிடுகையில், புதிய எஸ்யூவி காரின் டிசைன் லேசான கர்வ் வடிவத்தில் இடம்பெற்றுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் இது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக, புதிய ஜெனரேஷன் ஸ்கார்பியோ கார் நாடெங்கிலும் சோதனை ஓட்டத்தில் இருந்த ஸ்கார்பியோ போன்றே இருக்கிறது.
Also Read : பட்ஜெட் விலையில், அதிக மைலேஜ் தரும் பைக்குகள் பட்டியல்..
போட்டி எப்படி இருக்கிறது
மார்க்கெட்டில் தற்போது உள்ள கார்களில் ஸ்கார்பியோவுக்கு நிகரான நேரடி போட்டியில் எந்தக் காரும் இல்லை. அதே சமயம், ஹூண்டாய் கிரேட்டா, கியா செல்டோஸ் போன்ற கார்கள் ஸ்கார்பியோ காருக்கு நிகரான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. 2022ஆம் ஆண்டில் வெளிவரக் கூடிய ஸ்கார்பியோ காரானது மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி300 மற்றும் எஸ்யூவி700 கார்களுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.