Home /News /automobile /

மஹிந்திரா நிறுவனத்தின் சுதந்திர தின சர்ப்ரைஸ் : எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம்!

மஹிந்திரா நிறுவனத்தின் சுதந்திர தின சர்ப்ரைஸ் : எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம்!

மஹிந்திரா கார்

மஹிந்திரா கார்

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தன்று மக்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மஹிந்திரா நிறுவனம் 5 எலெட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்திய மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற காராக மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி உள்ளது. கடந்த ஜூலை மாத நிலவரப்படி அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மஹிந்திரா நிறுவனம் 4வது இடத்தை பிடித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் இந்தியாவில் 7,917 பொலிரோ கார்களை விற்பனை செய்துள்ளது. இதேபோல் 6,277 எக்ஸ்யூவி 700 கார்களையும், 5,937 எக்ஸ்யூவி 300 கார்களையும் விற்பனை செய்துள்ளது.

    இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று இந்தியாவில் மொத்தம் 5 எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் களமிறங்க உள்ளது.

    மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான மற்றும் அதிகமான விற்பனையான எக்ஸ்யூவி 700 மாடல்களும் விரைவில் எலெக்ட்ரிக் கார்களாக அறிமுகப்படுத்தபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி400 என்ற காரை அறிமுகப்படுத்த உள்ளது. இது எதிர்கால எலெக்ட்ரிக் கார்களுக்கான டிசனைக் கொண்டிருக்கும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Also Read : இளசுகளை கவரும் ஹோண்டாவின் புதிய அறிமுகம்! CB300F விலை, அம்சங்கள்!

    சமீபத்தில் தனது 3 எலெக்ட்ரிக் எஸ்க்யூவி கார்களின் டீஸரை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டிருந்தது, அதில் C-வடிவ LED விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள் இடம் பெற்றிருந்தன. கார்களின் முன் பக்க வடிவமைப்பு கூர்மையாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

    மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள எலெக்ட்ரிக் கார்களில் டிரைவர் ஓரியண்டடு காக்பிட், சிங்கிள் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஸ்லாப், சென்ட்ரல் கன்சோல் ஆர்ம், மாடுலர் டிசைன் சீட்ஸ், பேக்கேஜின் ஒரு பகுதியாக இருக்கும் கண்ணாடிகளுக்குப் பதிலாக பக்கவாட்டு கேமராக்கள் ஆகிய இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்டீரியர்கள் மற்றும் பிற வசதிகள் 5 கார்களிலும் ஒரே மாதிரியாக இருக்குமா? அல்லது வேறு மாதிரியாக இருக்குமா? என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

    பார்ன் எலக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படும் ஹைடெக் டிஸ்ப்ளேக்கள் இடம் பெறலாம். லைவ் சார்ஜிங் இன்பர்மெஷன் கிளைமேட் கன்ட்ரோல், சீட் அட்ஜஸ்மெண்ட் மற்றும் பிற டெலிமெட்ரிகள் ஆகியவையும் இடம் பெற வாய்ப்புள்ளது. இந்த ‘Born electric’ ரேஞ்சு SUV கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சமயத்தில் இந்த கார்களை மஹிந்திரா நிறுவனம் வோல்க்ஸ்வாகன் நிறுவனத்தின் MEB எலக்ட்ரிக் பிளேட்போர்ம் மூலம் உருவாக்குகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன.

    இந்த SUVகள் மஹிந்திராவின் டிசைன் தலைவரான பிரதாப் போஸ் தலைமையில் இயங்கும் லண்ட ஆக்ஸ்போர்டுஷயர் பகுதியில் உள்ள Mahindra Advanced Design Europe Studio மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. XUV300 மாடலை அடிப்படையாக கொண்ட எலெக்ட்ரிக் காரான XUV400 காரைப் போலவே, எலக்ட்ரிக் XUV700 காரும் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Automobile, Mahindra

    அடுத்த செய்தி