மஹிந்திரா தார் மாடல் காருக்கு தாறுமாறு புக்கிங் - உற்பத்தியை அதிகப்படுத்திய மஹிந்திரா!

மஹிந்திரா தார் மாடல் காருக்கு தாறுமாறு புக்கிங் - உற்பத்தியை அதிகப்படுத்திய மஹிந்திரா!

மஹிந்திரா தார்

வெயிட்டிங் பீரியடை குறைக்கும் விதமாக நவம்பர் 4 ஆம் தேதி அறிவிப்பை ஒன்றை வெளியிட்ட மஹிந்திரா, தார் மாடல் கார்களின் உற்பத்தியை 50 விழுக்காடு அதிகரித்திருப்பதாக தெரிவித்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் காரின் வெயிட்டிங் பீரியட் 10 மாதங்களை கடந்துள்ளதால், உற்பத்தியை அந்நிறுவனம் வேகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா தார் மாடல் கார், சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. அறிமுகபடுத்தப்பட்ட முதல் 18 நாட்களில் 15 ஆயிரத்துக்கும் மேலான புக்கிங்கை பதிவு செய்து அசத்தியது. முதல் மாத்ததிலேயே 20 ஆயிரம் புக்கிங்குகளையும் பெற்று மஹிந்திரா நிறுவனத்துக்கு வியப்பை கொடுத்தது. இதனால் இந்த மாடல் கார்களுக்கான வெயிட் பீரியட் 8 முதல் 10 மாதத்தை அடைந்தது. 

வெயிட்டிங் பீரியடை குறைக்கும் விதமாக நவம்பர் 4 ஆம் தேதி அறிவிப்பை ஒன்றை வெளியிட்ட மஹிந்திரா, தார் மாடல் கார்களின் உற்பத்தியை 50 விழுக்காடு அதிகரித்திருப்பதாக தெரிவித்தது. அதாவது மாதம் 2 ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. காரின் கலர் மற்றும் வேரியண்டுக்கு ஏற்ப சில நகரங்களில் வெயிடிங் பீரியட் 10 மாதங்களையும் கடந்து செல்கிறது. இருப்பினும், சந்தையில் இந்த மாடலுக்கான வரவேற்பு குறைந்தபாடில்லை. ஜனவரியில் மட்டும் புதிதாக 6 புக்கிங்குகள் பதிவாகியுள்ளன. 

இதுவரை புக்கிங் செய்யப்பட்ட கார்களில் 45 விழுக்காடு ஆட்டோமேடிக் வேரியண்டுகளுக்கும், 25 விழுக்காடு பெட்ரோல் பவர்டிரெய்ன் மாடல்களுக்கும் பதிவாகியுள்ளன. பிப்ரவரி 1 ஆம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 38,500 முன்பதிவுகள் இதுவரை புக்கிங் செய்யப்பட்டுள்ளன. சந்தையில் UV மாடல் கார்களில் டிமாண்ட் கிரியேட் செய்வதில் மஹிந்திரா நிறுவனத்துக்கு நிகர் மஹிந்திரா என கூறலாம். அந்தளவுக்கு தார், ஸ்கார்பியோ, பொலீரோ, XUV300 மாடல் கார்கள் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

Also read... புதிய கலர் விருப்பத்தில் வெளியாக உள்ள 'ராயல் என்பீல்டு ஹிமாலயன்'... லீக்கான புகைப்படங்கள்!

இது தொடர்பாக பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் டைரக்டர் ராஜேஷ் ஜெஜூரிகார், சந்தையில் நிலவும் டிமாண்டுகளுக்கு ஏற்ப மஹிந்திரா நிறுவனம் வாகனங்களை உற்பத்தி செய்து வருவதாக தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி, தார் மாடல் கார்கள் உற்பத்தியில் முன்னணியில் இருப்பதாக தெரிவித்த அவர், அதற்கு அடுத்தபடியாக எக்ஸ்.யூ.வி300, பொலீரோ மற்றும் ஸ்கார்பியோ இருப்பதாக தெரிவித்தார். இந்திய ஆட்டோ மொபைல் துறை சப்ளையில் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. 

குறிப்பாக, கொரோனாவுக்குப் பிறகு ஏற்பட்ட நெருக்கடியால் இரும்பு உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, டிமாண்ட் மற்றும் சப்ளைக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் நிலவி வருகிறது. கார்களின் விலை உயர்வு குறித்து பேசிய ராஜேஷ், இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஒட்டு மொத்த ஆட்டோமொபைல் துறையும் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும், அதனால் மற்ற நிறுவனங்களைப்போல் மஹிந்திரா நிறுவனமும் கார்களின் விலையை உயர்த்தியுள்ளதாக கூறினார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: