ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

Mahindra Thar: மஹிந்திரா தார் எஸ்யூவி-யின் விலை ரூ.92,000 உயர்வு: 3ம் முறையாக விலையை உயர்த்திய நிறுவனம்!

Mahindra Thar: மஹிந்திரா தார் எஸ்யூவி-யின் விலை ரூ.92,000 உயர்வு: 3ம் முறையாக விலையை உயர்த்திய நிறுவனம்!

மஹிந்திரா தார் எஸ்யூவி

மஹிந்திரா தார் எஸ்யூவி

மஹிந்திரா நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் விலை உயர்வை அறிவிப்பது இது மூன்றாவது முறையாகும்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  மஹிந்திரா நிறுவனம் தனது உற்பத்தி மாடல்களுக்கு மீண்டும் விலை உயர்வை அறிவித்துள்ளது. அதில் வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட மஹிந்திரா தாருக்கு அதிக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த எஸ்யூவியின் விலை அதன் வேரியண்ட்டைப் பொறுத்து ரூ.32,000 முதல் ரூ.92,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கார் வாகன ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது. மேலும் விலை உயர்வு குறித்து இந்திய கார் தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம் தெரிவித்ததாவது, வாகன உற்பத்தியை அதிகரிப்பதற்கான உத்திகளை நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் விநியோக தடைகள் காரணமாக அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.

  இதன் விளைவாக, காரின் உற்பத்தி வேகம் இன்னும் அப்படியே தான் உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் காரை தயாரிப்பதற்கு நிறுவனம் செய்ய வேண்டிய செலவுகள் தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. உயர்த்தப்பட்ட வாகன விலைகள் ஜூலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் விலை உயர்வை அறிவிப்பது இது மூன்றாவது முறையாகும். முதல் விலை உயர்வு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சில மாதங்கள் கழித்து மே மாதம் இரண்டாவது முறையாக விலையை உயர்த்தியது. தற்போது 3ம் முறையாக விலையை உயர்த்தி இருக்கிறது. என்னதான் விலை உயர்த்தப்பட்டாலும், அதனை பெரிதும் பொருட்படுத்தாமல் தார் எஸ்யூவி வாகனம் வடிக்கையாளர்களிடையே பிரபலமடைவதற்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று, அதன் உடல் பாணி, அதாவது சாப்ட்-டாப், கன்வெர்ட்டிபிள் மற்றும் ஹார்ட் டாப் உள்ளிட்ட ஸ்டைல் வடிவமைப்பு இதற்கு காரணம். இந்த நான்கு சக்கர வாகனம் பெட்ரோல் மற்றும் டீசல் விருப்பங்களுடன் வருகிறது.

  மேலும் இதில் உள்ள 2.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் எஞ்சின், 130 பிஎஸ் அதிகபட்ச சக்தியையும் 320 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல், 150 பிஎஸ் அதிகபட்ச சக்தியையும் 320 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது. இந்த இரண்டு என்ஜின் விருப்பங்களும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் கிடைக்கின்றன. மேலும் விலை உயர்வு பெற்ற பிற மஹிந்திரா மாடல்களில் பொலெரோ, மராஸ்ஸோ, ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி 300 ஆகியவை அடங்கும்.

  Also read... இந்தியாவில் அல்ட்ரோஸ், நெக்ஸான், நெக்ஸான் இ.வி டார்க் ரேன்ஞ் மாடல்கள் அறிமுகம்!

  இருப்பினும், இந்த கார்களைப் பொறுத்தவரை, விலை இரண்டு அல்லது மூன்று சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் பிரபலமடையாத வாகனங்களுக்கு பெயரளவு மட்டுமே விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த அடைப்புக்குறிக்குள் உள்ள சில கார்களின் உற்பத்தி விரைவில் நிறுத்தப்படவுள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதாவது மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் அல்துராஸ் ஜி 4 மற்றும் கேயூவி 100 ஆகிய வாகனகளின் உற்பத்தி நிறுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Mahindra