• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • அறிமுகமான 1 வருடத்திலேயே புதிய புக்கிங் மைல்கல்லை எட்டிய Mahindra Thar SUV!

அறிமுகமான 1 வருடத்திலேயே புதிய புக்கிங் மைல்கல்லை எட்டிய Mahindra Thar SUV!

மஹிந்திரா தார் எஸ்யூவி

மஹிந்திரா தார் எஸ்யூவி

மஹிந்திரா தார் எஸ்யூவி இந்தியாவில் கணிசமான புகழ் பெற்ற கார்களில் ஒன்று என்பதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

  • Share this:
உள்நாட்டு வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று இந்திய வாகன சந்தையில் தனி இடம் பிடித்துள்ளது. சரியாக கடந்த ஒரு வருடத்திற்கு முன், 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி மஹிந்திரா நிறுவன தயாரிப்பான தார் எஸ்யூவியின் இரண்டாம் தலைமுறை மாடல் (Thar SUV second gen) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மஹிந்திராவாகனம் அறிமுகமானதிலிருந்து கடந்த ஒரு வருடத்தில் 75,000-த்திற்கும் அதிகமான ஆர்டர்களை பெற்று மக்களின் அபிமானம் பெற்ற நிறுவனம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

மேலும் மஹிந்திரா தார் எஸ்யூவி இந்தியாவில் கணிசமான புகழ் பெற்ற கார்களில் ஒன்று என்பதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளது. சமீபத்தில் அடைந்த இந்த புதிய மைல்கல் பற்றி கூறி உள்ள மஹிந்திரா நிறுவனம், அறிமுகம், செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை கடந்த ஒரு வருடத்தில் Thar SUV கார் புக்கிங் எண்ணிக்கை 75,000-த்தை தாண்டி சென்று கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்து உள்ளது.

கடந்த வருடம் அறிமுகமான மஹிந்திராவின் இரண்டாம் தலைமுறை Thar SUV பெட்ரோல் எஞ்சின், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், நியூ ஸ்டைலிங் அப்டேட்ஸ் மற்றும் மிகவும் இணைக்கப்பட்ட மற்றும் அப்மார்க்கெட் கேபின் உள்ளிட்ட பல முக்கியமான அப்டேட்ஸ்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த லேட்டஸ்ட் நியூ மஹிந்திரா தார் கார் இப்போது BS-VI உமிழ்வு நெறிமுறைக்கு இணக்கமானது மற்றும் 2.0 லிட்டர் mStallion TGDi பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் mHawk டீசல் எஞ்சின் ஆகிய இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் வருகிறது.

அதே போல புக்கிங் எண்ணிக்கையை பொறுத்தவரை 50% புக்கிங் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட வேரியன்ட்களுக்காகவும், 25% புக்கிங்கள் பெட்ரோல் மாடலுக்காகவும் செய்யப்பட்டு வருகிறது என்று மஹிந்திரா நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது. கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட Thar AX வேரியன்ட்டின் விலை ரூ.9.8 லட்சம் மற்றும் சொகுசு அடிப்படையிலான Thar LX காரின் விலை ரூ.12.49 லட்சம் என்ற விலையில்அறிமுகப்படுத்தப்பட்டது.

Also read... யமாஹா நிறுவனத்தின் YZF-R15 V4 பைக் உதிரி பாகங்கள் விலையுடன் அறிவிப்பு!

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கடந்த வருடம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Thar காரின் முதல் யூனிட் ரூ.1.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டு, இந்த நிதி தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. புதிய 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் 150 பெட்ரோல் எஞ்சின் தார் வாகனமானது 300 Nm டார்க்கை கொண்டு 150 பிஎச்பி பவரை வழங்குகிறது மற்றும் 2.2 லிட்டர் mHawk டீசல் யூனிட் 300 Nm டார்க்கை கொண்டு,130 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது.

6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் தவிர, புதிய தார் 2020 காரானது சாஃப்ட்-டாப், ஹார்ட்-டாப் மற்றும் மாற்றத்தக்க ரூஃப் ஆப்ஷனுடன் வெளி வருகிறது. மேலும் ரெட் ரேஜ், மிஸ்டிக் காப்பர், கேலக்ஸி கிரே, நாபோலி பிளாக், ராக்கி பீஜ், அக்வா மரைன் உள்ளிட்ட 6 கலர் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: