• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • மஹிந்திரா தார் கார்களின் விலை உயர்வு - எந்தெந்த வேரியண்டுகளுக்கு என்ன விலை?

மஹிந்திரா தார் கார்களின் விலை உயர்வு - எந்தெந்த வேரியண்டுகளுக்கு என்ன விலை?

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஏஎக்ஸ் ஆப்ஷனல் பெட்ரோல் (AX petrol) வேரியண்ட்தான் இப்போது விலை குறைவான வேரியண்ட் தேர்வாக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா நிறுவன தார் (Mahindra Thar) கார்களின் விலை அதிகபட்சமாக 40 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி கார் நிறுவனமான மஹிந்திரா (Mahindra), தனது நிறுவன கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. கார்களுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், கார்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாக ஏற்கனவே அந்த நிறுவனம் கூறியிருந்தது. அதன்படி, பல்வேறு மாடல்களில் உள்ள எஸ்.யூ,விக்களை பலதரப்பட்ட விலைகளை வழங்கி வரும் மஹிந்திரா, கடந்த ஆண்டு அக்டோபர் 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா தார் (Mahindra Thar) கார்களின் விலையையும் உயர்த்தியுள்ளது.

நவம்பர் 30ம் தேதிக்கு முன்னர் முன்பதிவு செய்த கார்களின் விலையை உயர்த்தப்படாது என அறிவித்துள்ள அந்நிறுவனம், வேரியண்டுகளில் மாற்றம் கோரிய வாடிக்கையாளர்களின் புக்கிங் புதிய விலை உயர்வு அடிப்படையிலேயே  கார்கள் வழங்கப்படும் எனக் கூறியுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் 20,337 ரூபாயாகவும், அதிகபட்ச விலை உயர்வு 40, 338 ரூபாயாகவும் உள்ளது. புதிய மஹிந்திரா தார் கார்களின் விலை 40 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியிருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. புதிய தலைமுறை தார் கார்கள் இரண்டு என்ஜின்களை கொண்டிருக்கின்றன. 2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ( Turbo petrol motor), 2 லிட்டர் டர்போ டீசல் வெர்சன்களில் (Turbo disel version) கிடைக்கிறது.

Also read... ஜனவரி 26ல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய Tata Safari SUV: இந்த கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய 5 விஷயங்கள்!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஏஎக்ஸ் ஆப்ஷனல் பெட்ரோல் (AX petrol) வேரியண்ட்தான் இப்போது விலை குறைவான வேரியண்ட் தேர்வாக உள்ளது. இதன் விலை ரூ.11.90 லட்சத்தில் இருந்து ரூ.12.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று, ஏஎக்ஸ் ஆப்ஷனல் டீசல் வேரியண்ட் விலை ரூ.12.20 லட்சத்திலிருந்து ரூ.12.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏஎக்ஸ் ஆப்ஷனல் டீசல் மேனுவல் (LX Diesel) மாடல் விலை ரூ.12.20 லட்சத்தில் இருந்து ரூ.12.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, எல்எக்ஸ் பெட்ரோல் மேனுவல் ஹார்டு டாப் (Hardtop) மாடல் ரூ.12.49 லட்சத்திலிருந்து ரூ.12.79 லட்சமாக உயர்ந்துள்ளது. எல்எக்ஸ் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட் விலை ரூ.13.55 லட்சத்திலிருந்து ரூ.13.95 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தார் எஸ்யூவியின் (Thar SUV) விலை உயர்ந்த வேரியண்ட்டாக விற்பனையில் இருக்கும் எல்எக்ஸ் டீசல் (LX Disel) ஆட்டோமேட்டிக் மாடல் விலை ரூ.13.75 லட்சத்திலிருந்து ரூ.14.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தார் கார்கள் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 30 ஆயிரம் முன்பதிவுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்ட தொடக்க காலங்களில் முன்பதிவு செய்யப்பட்ட கார்கள் 4 முதல் 5 மாதங்களில் கிடைத்தன. தற்போது 7 மாதங்களாக அதிகரித்து, வெயிடிங் டைம் 10 மாதங்களாக உயர்ந்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: