முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / புதுப்புது கலர்களில் மஹிந்திரா தார் கார் - குவியும் ஆர்டர்கள்..!

புதுப்புது கலர்களில் மஹிந்திரா தார் கார் - குவியும் ஆர்டர்கள்..!

பயனாளர்களின் சௌகரியம் கருதி லாக் அல்லது அன்லாக் பட்டன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆகிய வசதிகள் உள்ளன.

பயனாளர்களின் சௌகரியம் கருதி லாக் அல்லது அன்லாக் பட்டன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆகிய வசதிகள் உள்ளன.

பயனாளர்களின் சௌகரியம் கருதி லாக் அல்லது அன்லாக் பட்டன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆகிய வசதிகள் உள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி மாடல் மஹிந்திரா தார் காரில் புதிய அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கூடுதலான கலர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு Delisted Rocky Beige மற்றும் Mystic Copper ஆகிய கலர் வேரியண்ட்கள் மட்டுமே இருந்தன.

தற்போது Napoli Black, Galaxy Grey, Aqua Marine மற்றும் Red Rage ஆகிய வண்ணங்களில் புதிய வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்று மஹிந்திரா நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேஷ்போர்டு பகுதியில் சில கட்டுப்பாடு கட்டமைப்புகளை மஹிந்திரா நிறுவனம் மாற்றியமைத்துள்ளது.

தற்போதைய புதிய வேரியண்ட்களில் வீல் ஹப் கேப்ஸ் மற்றும் ஸ்டியரிங் வீல் ஆகிய பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட லோகோ அமைக்கப்பட்டிருப்பது ரகசியமாக படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் மூலமாக தெரியவந்துள்ளது. இதேபோன்று டேஷ்போர்டு பகுதியின் கீழ் பக்கத்திலும் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்விட்ச்களின் டிசைன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அவை முன்பை விட மெலிதாகவும், சௌகரியமானதாகவும் காட்சியளிக்கின்றன. ஸ்டியரிங் வீலுக்கு வலப்பக்கமாக இருந்த டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் ஹில் டெஸண்ட் கண்ட்ரோல் ஆகியவற்றை நடுப்பகுதிக்கு மாற்றி அமைத்துள்ளனர்.

பயனாளர்களின் சௌகரியம் கருதி லாக் அல்லது அன்லாக் பட்டன் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 2.0 லிட்டர் பெட்ரோல் இயந்திரம் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இயந்திரம் ஆகிய அம்சங்கள் அப்படியே தொடருகின்றன. இதில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆகிய வசதிகள் உள்ளன.

புதிய ஸ்கார்பியோ கார்களின் டெலிவரி :

இதற்கிடையே மஹிந்திரா நிறுவனத்திடம் வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஸ்கார்பியோ என் கார்களின் டெலிவரியானது செப்டம்பர் 26ஆம் தேதி சிவராத்திரி நாளன்று தொடங்க இருக்கிறது.

ALSO READ | இந்த எலெக்ட்ரிக் காரை விட இந்த பேட்டரியின் விலை அதிகமாம்.!

செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கி 10 தினங்களுக்குள் 7 ஆயிரம் கார்களை டெலிவரி செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இசட்8-எல் வேரியண்ட் கார்களை புக்கிங் செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், குறிப்பாக இசட்8-எல் வேரியண்ட் புக்கிங் செய்திருக்கும் முதல் 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்களில் டெலிவரி செய்யப்படும் என்றும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் எந்தெந்த மாடல்களை புக்கிங் செய்துள்ளனர் என்பதைப் பொறுத்து காத்திருப்பு காலம் மாறுபடும் என்றும், எந்த வேரியண்ட் புக்கிங் செய்திருந்தாலும் முதல் 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு 4 மாதங்களுக்குள் கார் டெலிவரி செய்யப்படும் என்றும் மஹிந்திரா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்கார்பியோ என் மாடலில் ஃபெதர் லைட் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டியரின், நான்கு டிஸ்க் பிரேக், 6 ஏர்பேக்ஸ், இஎஸ்சி, இபிடி உடன் உள்ள ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

First published:

Tags: Car, Mahindra, Viral News