Mahindra Thar | 2026க்குள் இந்தியாவில் 5 டோர் வெர்சன் தார் உட்பட 9 எஸ்யூவிக்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டம்!

5 டோர்கள் கொண்ட மஹிந்திரா தார்

ஐந்து கதவுகள் கொண்ட இந்த வாகனம் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் கொண்டதாக இருக்கும். இது 130 ஹெச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கும்.

  • Share this:
    இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா விரைவில் ஐந்து கதவுகளை கொண்ட தார் வெர்சனை அறிமுகப்படுத்தவுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

    சமீபத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாவது, அதன் எஸ்யூவிக்கள் தற்போது பைப்லைனில் இருப்பதை உறுதி செய்துள்ளது. அந்த மாடல்கள் 2023 மற்றும் 2026-க்கு இடையில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இது தவிர, 2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒன்பது மாடல்களை அறிமுகப்படுத்த இலக்கு வைத்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வெளியாகவுள்ள இந்த சுவாரஸ்யமான வாகனங்கள் வரிசையில் புதிய தலைமுறை XUV300, ஈ.வி. இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மின்சார வாகனங்கள் மற்றும் W620 மற்றும் V201 என குறியீட்டு பெயரிடப்பட்ட இரண்டு கார்கள் ஆகியவை அடங்கும். சுவாரஸ்யமாக ஐந்து கதவுகள் கொண்ட மஹிந்திரா தாரைப் பொருத்தவரை, இது பெரும்பாலும் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியாகி மாஸ் காட்டிய 3-டோர் தார் அடிப்படையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also read: Renault Triber: கிராஷ் டெஸ்டில் சாதித்த சென்னை தயாரிப்பு ரெனால்ட் ட்ரைபர் கார்!

    இதுகுறித்து மோட்டோராய்டுகளில் வெளியான அறிக்கையின்படி, வரவுள்ள 5 டோர் காரின் ஸ்டைல் மற்றும் வடிவமைப்பை பொறுத்தவரை, அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்கும் என்றாலும், தற்போதுள்ள தார் உடன் ஒப்பிடும்போது இது நீண்ட மற்றும் விசாலமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காருக்குள் கூடுதல் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது வரை வெளியான தகவலின்படி, அதிக இடத்தைப் பெறுவதற்கு பின்புற மற்றும் முன் ஓவர்ஹாங்க்கள் நீட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் வீல்பேஸ் அப்படியே இருக்க வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், இந்த விவகாரத்தில் இதுவரை எந்த அதிகார தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து புதிய சாத்தியக்கூறுகள் அடிப்படையிலும், விரைவில் வெளியிடப்படவுள்ள தார் தற்போதுள்ள மாடலை விட அதிக அம்சங்களைக் கொண்டிருக்கும். மேலும் தற்போதுள்ள எஸ்யூவியை விட அதிக விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜினைப் பொறுத்தவரை,

    ஐந்து கதவுகள் கொண்ட இந்த வாகனம் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் கொண்டதாக இருக்கும். இது 130 ஹெச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கும். பெரும்பாலும், இந்த வாகனத்தில் ஒரு பெட்ரோல் சாய்ஸூம் இருக்கும். இது 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட எஞ்சினாக இருக்கும். இது 150 ஹெச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை உருவாக்கும். இந்த கார் மனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், மஹிந்திரா 2021 ஆம் ஆண்டில் XUV700 ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதைத் தொடர்ந்து ஸ்கார்பியோ மாடல் 2022-க்குள் இந்தியா சாலைகளில் விற்பனைக்கு தயாராகும் என்று கூறப்படுகிறது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: