முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / 5 டோர் மஹிந்திரா தார் சோதனை ஆரம்பம்.. எப்போது அறிமுகம் தெரியுமா.?

5 டோர் மஹிந்திரா தார் சோதனை ஆரம்பம்.. எப்போது அறிமுகம் தெரியுமா.?

மஹிந்திரா தார்

மஹிந்திரா தார்

Mahindra Thar 5-door | இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள நியூ ஜெனரேஷன் 5 டோர் மஹிந்திரா தார் காரின் சோதனை ஓட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் ஆஃப் ரோடு டிராவல் பிரியர்களின் விருப்பமாக மஹிந்திரா தார் எஸ்யூவி இருந்து வருகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் புதிய தலைமுறை அம்சங்களுடன் மஹிந்திரா தார் எஸ்யூவி அப்டேட் செய்யப்பட்டு மஹிந்திரா தார் 5-டோர் வெர்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது. த்ரீ-டோர் மாடலை அறிமுகப்படுத்தியதில் இருந்தே, கார் பிரியர்கள் இந்த பிரபலமான ஆஃப் ரோடு மாடலின் 5 டோர் வெர்ஷன் அறிமுகத்திற்காக காத்துக்கிடக்கின்றனர். தற்போது மஹிந்திரா நிறுவன வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மஹிந்திரா தார் 5-டோர் வெர்ஷன் எஸ்யூவிக்கான சோதனை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. moto._tourer என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், நியூ ஜெனரேஷன் 5 டோர் மஹிந்திரா தார் காரின் சோதனை ஓட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் காரின் உருவத்தை மறைக்கும் விதமாக பிளாக் அண்ட் ஒயிட் கலரில் கவர் செய்யப்பட்ட மஹிந்திரா தார் 5-டோர் வெர்ஷன் சாலையில் சென்று கொண்டிருப்பது போன்ற சில நிமிட கிளிப்பிங்ஸும் வெளியாகியுள்ளது. வடிமைப்பு பணிகள் நிறைவடையாத நிலையில் காரின் புரோடக்‌ஷன் பணிகள் ஆரம்பமாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றும், அடுத்த ஆண்டு எப்போது வேண்டுமானாலும் மஹிந்திரா தார் 5-டோர் வெர்ஷன் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
View this post on Instagram

 

A post shared by Anand B (@moto._tourer)இதற்கு முன்னதாக வெளியான மஹிந்திரா தார் 3 டோர் வொர்ஷன் உடன் ஒப்பிடும் போது, 5 டோர் மாடல் அகலமான வீல்பேலன்ஸ் மற்றும் உயரமான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா 3 டோர் வெர்ஷன் 3,984 மில்லி மீட்டர் நீளமும், 1,844 மில்லி மீட்டர் உயரமும், 1,820 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 2,450 மில்லி மீட்டர் வீல்பேஸ் கொண்டது.

Also Read : 10 லட்சத்திற்கும் குறைவான சிறந்த கார்களின் பட்டியல் இதோ..

மஹிந்திரா தார் 5-டோர் எஸ்யுவி மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ N மாடலை சார்த்திருக்கும் எனத் தெரிகிறது. இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர்களில் பல அம்சங்கள் ஸ்கார்பியோ என் மாடலைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ N மிகவும் கரடுமுரடான லேடர் ஃபிரேம் சேஸைக் கொண்டிருந்தது, ஆனால் அதிக வலிமை கொண்ட எஃகு மூலமாக மஹிந்திரா தார் 5 டோர் மாடலுக்கான சேஸ் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தார் 5 டோர் எஸ்யூவி ஆனது ஆறு அல்லது ஏழு இருக்கை அமைப்புகளுடன் வர உள்ளதால், இருக்கையின் வடிவமைப்பு மற்றும் செயல்திறனும் மாறுபடக்கூடும் எனத் தெரிகிறது.

Also Read : ரூ.60 ஆயிரம் வரை அதிரடி ஆபர்களை அறிவித்த ரெனால்ட்.! 

தார் 3-டோர் மாடல் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் அம்சங்களைக் கொண்டுள்ளது. அதேபோல் தார் 5 டோர் மாடலும் 2.0-லிட்டர் mStallion டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின், 2.2-லிட்டர் mHawk டர்போ டீசல் என்சின் ஆப்ஷன்களுடன் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Automobile, Mahindra, Thar, Viral Video