இந்தியாவில் உள்ள முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. இந்த நிறுவனம் SUV ரக கார்களுக்கு பெயர் பெற்ற ஓர் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் XUV 500, தார், ஸ்கார்பியோ, பொலேரோ போன்ற SUV ரக கார்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமான SUV கார்களில் ஒன்றாக உள்ளன.
இதில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ எஸ்யூவி வாகனத்திலேயே அதிகம் விற்பனையாகும் காராக உள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் எஸ்யூவி கார்களிலேயே முதன்மையானதாக இருந்து வருகிறது. இதனிடையே கடந்த ஜூன் 27ம் தேதி அன்று, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ - என் காரை அறிமுகப்படுத்தியது. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் என்று அழைக்கப்படும் இந்த காரானது இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குள் ஏற்கனவே உள்ள ஸ்கார்பியோ காரை விற்க திட்டமிட்டுள்ள மஹிந்திரா நிறுவனம் ரூ.1.97 லட்சம் வரை அதிரடி தள்ளுபடியை வழங்கி வருகிறது. தனது புதிய மாடலின் விற்பனையை அதிகரிக்கவும், பழைய மாடலான ஸ்கார்பியோ காரை விற்கவும் இந்த தள்ளுபடியை மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.
மாற்றங்களைப் பற்றி பேசுகையில், ஸ்கார்பியோ கிளாசிக் இரண்டு முனைகளிலும் திருத்தப்பட்ட பம்பர்களுடன் வர வாய்ப்புள்ளது. புதிய ரேடியேட்டர் கிரில் மற்றும் ஃபாக் லேம்ப் ஹவுசிங் மூலம் முன்பகுதியில் நுட்பமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அலாய் வீலுக்கான புதிய வடிவமைப்பு காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கார்பியோ-என் காரில் டைனமிக் டர்ன் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
Also Read : எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ரூ.10 லட்சம் வரை அரசே தள்ளுபடி... மாநில அரசின் ஆஃபரை பெறுவது எப்படி.?
மேலும், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, காற்றோட்டமான முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயிண்மெண்ட் சிஸ்டம் மற்றும் பல கூடுதல் அம்சங்களுடன் ஸ்கார்பியோ கிளாசிக்கை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. முந்தையை ஸ்கார்பியோ காரை விட ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் காரில் இன்டீரியர் முழுவதும் மாற்றப்பட்டு பிரீமியம் வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஸ்கார்பியோ-என் மாடலில் 2.0 லிட்டர் எம்-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.2 லிட்டர் M-ஹாக் டீசல் என்ஜின், 140 BHP மற்றும் 320 NM டார்க் வசதியுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : Pay-as-you-drive வாகன இன்சூரன்ஸ் திட்டம் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. ஸ்கார்பியோ கிளாசிக்கை 4WD லேஅவுட் விருப்பத்துடன் விற்க திட்டமிட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து தற்போது வரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. ஸ்கார்பியோ கிளாசிக் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் உடன் விற்பனை செய்யப்படும், இது முற்றிலும் புதிய சேஸ்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் புதிய-புதிய வடிவமைப்புடன் வருகிறது.புதிய ஸ்கார்பியோ என் காரின் முன்பதிவு இம்மாதம் 30ம் தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Mahindra, Suv car