Home /News /automobile /

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திராவின் புதிய ஸ்கார்பியோ அறிமுகம் தேதி அறிவிப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திராவின் புதிய ஸ்கார்பியோ அறிமுகம் தேதி அறிவிப்பு

புதிய Mahindra Scorpio-N

புதிய Mahindra Scorpio-N

புதிய Scorpio N பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் வரும் என்று தெரிகிறது. மேலும் இந்தபுதிய காரில் 4x4 ஆப்ஷன் கிடைப்பதை மஹிந்திரா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரானது, இந்தியாவில் வரும் ஜூன் 27, 2022 அன்று அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுநாள் வரை Z101 என்ற குறியீட்டு பெயரால் குறிப்பிடப்பட்டு வந்த நியூ-ஜெனரேஷன் ஸ்கார்பியோ காரின் பெயர் பெயர் Mahindra Scorpio-N என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தற்போதைய தலைமுறை ஸ்கார்பியோவானது, ஸ்கார்பியோ கிளாசிக்காக விற்பனையில் தொடர்ந்து இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அறிமுகமாக உள்ள Mahindra Scorpio-N, "Big Daddy of SUVs" அதாவது தற்போதைய SUV கார்களுக்கெல்லாம் பெரிய SUV-யாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு வருகிறது.

முழு அளவிலான SUV தேவைப்படும் இளம் மற்றும் தொழில்நுட்ப ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய தலைமுறை Scorpio மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் கூறி இருக்கிறது. BigDaddyOfSUVs என்ற டேக் லைனுடன் சோஷியல் மீடியாக்களில் வரவிருக்கும் புதிய Scorpio-N காரின் டீசரையும் நிறுவனம் ஷேர் செய்து உள்ளது.

https://youtu.be/1v9ZrVUlE-s

Mahindra & Mahindra Limited-ன் ஆட்டோமேட்டிவ் டிவிஷன் தலைவர் விஜய் நக்ரா புதிய Scorpio N பற்றி பேசுகையில், ஸ்கார்பியோ கார் எப்போதுமே மஹிந்திராவுக்கு ஒரு முக்கிய மாடலாக இருந்து வருகிறது. இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு ஐகானிக் பிராண்டாக மாறியுள்ளது. இந்நிலையில் எங்களது 2022 Scorpio N வாடிக்கையாளர்களை மேலும் கவரும் வகையில் தற்போதைய மாடலை விட பல்வேறு புதிய மற்றும் மேம்பட்ட நவீன அம்சங்களுடன் வர உள்ளது. ஆல்-நியூ ஸ்கார்பியோ-என் இந்தியாவில் மீண்டும் SUV பிரிவில் மீண்டும் புரட்சியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கிறோம். Scorpio-N மூலம் உலகத் தரம் வாய்ந்த SUV-க்களை இந்திய சந்தைக்குக் கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

Also see... அடுத்த தலைமுறைக்காக கூட்டு சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் - மஹிந்திரா

புதிய Scorpio N பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் வரும் என்று தெரிகிறது. மேலும் இந்தபுதிய காரில் 4x4 ஆப்ஷன் கிடைப்பதை மஹிந்திரா நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் புதிய Mahindra Scorpio-N தற்போதைய தலைமுறை மாடலை விட சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது அளவில் பெரியதாகவும், புதிய பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பெறும். தவிர மேலும் பல ஹைடெக் அம்சங்களை கொண்டிருக்கும். Mahindra Scorpio-N சமீபத்திய போட்டோக்கள், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், ஃபாக் லேம்ப்ஸ் மற்றும் சி-ஷேப்டு LED DRL-க்களைப் பெறும் என்பதை வெளிப்படுத்துகிறது. இதன் சைட் ப்ரொஃபைலை பார்க்கும் போது மெஷின்-கட் மல்டி-ஸ்போக் அலாய் வீல்ஸ், பாடி லைன்களில் ஷார்ப் கட்ஸ் மற்றும் மடிப்புகள் மற்றும் ரூஃப் ரெயில்ஸ் உள்ளன. உயர்தர தொழில்நுட்பத்துடன், நம்பகத்தன்மை வாய்ந்த, அதிநவீன எஸ்யூவி-களை உருவாக்கும் பாரம்பரியத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து செல்கிறோம் என்று மஹிந்திரா அறிக்கை ஒன்றில் கூறி இருக்கிறது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Mahindra

அடுத்த செய்தி