Home /News /automobile /

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய காருக்கு இவ்வளவு வரவேற்பா! அரை மணி நேரத்தில் 1 லட்சம் பேர் புக்கிங்

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய காருக்கு இவ்வளவு வரவேற்பா! அரை மணி நேரத்தில் 1 லட்சம் பேர் புக்கிங்

scorpio N

scorpio N

Mahindra Scorpio-N | முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் கார் டெலிவரி செய்யப்பட உள்ளது. 2022 டிசம்பருக்குள் 20 ஆயிரம் கார்களை டெலிவரி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு புதிய பொருள் சந்தைக்கு வரும்போது, அதை வாங்கிப் பயன்படுத்திவிட வேண்டும் என்று மக்களிடம் தோன்றும் ஆர்வம் அலாதியானது. நாம் பயன்படுத்த போகிறோமோ, இல்லையோ புத்தம், புது பொருளை பார்த்தவுடன் அதை வாங்கிவிட வேண்டும் என்று மனம் துடிக்கத் தொடங்கும்.

சக நண்பர்களிடம், அலுவலக சகாக்களிடம் உள்ள பொருள் நம் மனதை கவரும்போது நம்மிடமும் அதே பொருள் இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். குறிப்பாக, இணைய வர்த்தக முறை அமலான பிறகு, ஒரு பொருளுக்கு முன்பதிவு செய்து, ஆவலாக காத்திருந்து, அதை வாங்கிப் பயன்படுத்துவது அலாதியான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

உதாரணத்திற்கு ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்களில் புதிய மொபைல் ஃபோன்களின் அறிமுக விற்பனைய நீங்கள் பார்த்திருப்பீர்கள். சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான ஃபோன்கள் விற்பனையாகி, உடனடியாக அவுட் ஆஃப் ஸ்டாக் மெசேஜ் வருவதை பார்த்திருப்பீர்கள். ஓரிரு ஆயிரங்களைக் கொண்ட ஃபோன்கள் இன்றைய டிஜிட்டல் உலகில் அவ்வளவு வேகமாக விற்பனையாவது பெரிய அளவுக்கு ஆச்சரியம் தராத விஷயம் தான்.



ஆனால், பல லட்சம் மதிப்பு கொண்ட கார்களுக்கு மக்கள் போட்டி, போடுவதை பார்த்திருக்கிறீர்களா? அதுவும் முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்தில் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் அதற்கு முன்பதிவு செய்தனர் என்பது நம்பும்படியாக இருக்கிறதா? ஆனால், அதுதான் உண்மை. சாமானிய மக்களுக்கு வேண்டுமானால் கார் வாங்குவதே ஒரு பெரும் கனவாக இருக்கலாம்.

Also Read : பஜாஜ் மற்றும் KTM இணைந்து உருவாக்கும் அதி நவீன எலக்ட்ரிக் பைக்.!

ஆனால், மொபைல் ஃபோன்களை மாற்றுவதை போல, கார்களை மாற்றும் அளவு வசதி படைத்தவர்களுக்கு, மார்கெட்டில் அடுத்து வரக் கூடிய டாப் பிராண்ட் கார் தன்னிடம் இருக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கும். அதன் வெளிப்பாடுதான் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் காருக்கான முன்பதிவு விஷயத்தில் நடைபெற்றுள்ளது.



18 ஆயிரம் கோடி மதிப்பு

உங்களுக்கு இன்னும் ஆச்சரியமான செய்தி என்னவென்றால், ஸ்கார்பியோ என் காருக்கான முன்பதிவு தொடங்கிய முதல் ஒரு நிமிடத்தில் 25 ஆயிரம் கார்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாம். அடுத்த அரை மணி நேரத்தில் மொத்தத்தில் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு லட்சம் கார்களின் மொத்த மதிப்பு, எக்ஸ் ஷோரூம் விலையின்படி ரூ.18 ஆயிரம் கோடி ஆகும்.

Also Read : ஒரு முறை சார்ஜ் செய்தாலே போதும்... 510கிமீ பயணிக்கும் இ-சைக்கிள் அறிமுகம்.! 

செப்டம்பர் முதல் டெலிவரி தொடங்கும்

முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் கார் டெலிவரி செய்யப்பட உள்ளது. 2022 டிசம்பருக்குள் 20 ஆயிரம் கார்களை டெலிவரி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு எந்த தேதியில் கார் கிடைக்கும் என்ற விவரம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தெரியவரும் என்று மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Mahindra

அடுத்த செய்தி