முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ஸ்கார்பியோ என் மாடல் புக்கிங் செய்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - நவராத்திரி நாளில் உங்களுக்கு கார் கிடைக்கும்.!

ஸ்கார்பியோ என் மாடல் புக்கிங் செய்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - நவராத்திரி நாளில் உங்களுக்கு கார் கிடைக்கும்.!

ஸ்கார்பியோ-என்

ஸ்கார்பியோ-என்

Mahindra Scorpio-N | செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கி 10 தினங்களுக்குள் 7,000 கார்களை டெலிவரி செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எஸ்யூவி மாடல் கார் பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் மாடலுக்கான புக்கிங் கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கியது. புக்கிங் தொடங்கிய 1 நிமிடத்தில் 25,000 ஆயிரம் கார்களுக்கும், அடுத்த அரை மணி நேரத்தில் 1 லட்சம் கார்களுக்கும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து முடித்தனர். ஒரு லட்சம் கார்களின் மொத்த புக்கிங் மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டது.

அந்த வகையில், கார் விற்பனைக்கு வரும் முன்பாகவே, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் சந்தையில் களமிறங்கியது ஸ்கார்பியோ என் கார். இதனை வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் டெலிவரி செய்ய உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், செப்டம்பர் 26ஆம் தேதி நவராத்திரி திருநாள் முதல் வாடிக்கையாளர்களுக்கு கார் டெலிவரி செய்ய இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

10 நாட்களில் 7 ஆயிரம் கார்கள் டெலிவரி

செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கி 10 தினங்களுக்குள் 7 ஆயிரம் கார்களை டெலிவரி செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இசட்8-எல் வேரியண்ட் கார்களை புக்கிங் செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், குறிப்பாக இசட்8-எல் வேரியண்ட் புக்கிங் செய்திருக்கும் முதல் 25,000 வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்களில் டெலிவரி செய்யப்படும் என்றும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் எந்தெந்த மாடல்களை புக்கிங் செய்துள்ளனர் என்பதைப் பொறுத்து காத்திருப்பு காலம் மாறுபடும் என்றும், எந்த வேரியண்ட் புக்கிங் செய்திருந்தாலும் முதல் 25,000 வாடிக்கையாளர்களுக்கு 4 மாதங்களுக்குள் கார் டெலிவரி செய்யப்படும் என்றும் மஹிந்திரா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கார் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் குறிப்பிட்ட அதே விலையில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Also Read : 10 லட்சத்திற்கும் குறைவான சிறந்த கார்களின் பட்டியல் இதோ..

பிரத்யேக டெலிவரி தேதி குறித்து தெரிவிக்கப்படும்

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் எந்த தேதியில் கார் வழங்கப்பட இருக்கிறது என்ற தகவல் சிஆர்எம் சேனல் மூலமாக தெரிவிக்கப்பட உள்ளது. முதல் 25,000 வாடிக்கையாளர்களுக்கு பிந்தைய நிலையில் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு எப்போது கார் டெலிவரி செய்யப்படும் என்பது குறித்து அடுத்த 10 தினங்களில் தகவல் தெரிவிக்கப்பட உள்ளது.

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்

எஸ்யூவி கார் பிரியர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப காரின் டிசைன், செயல்திறன், மேம்பட்ட தொழில்நுட்பம், மேம்பட்ட வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை ஸ்கார்பியோ என் காரில் இடம்பெறுகின்றன்றது.

Also Read : கார் வாங்க நிதியுதவி - டாடா மோட்டார்ஸ் உடன் இணைகிறது இந்தியன் வங்கி!

இதுகுறித்து மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமேடிவ் பிரிவு தலைவர் விஜய் நக்ரா கூறுகையில், “வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அதற்கு ஏற்றாற்போல எங்களிடம் உயர் தரமான ஆட்டோமேட்டட் உற்பத்தி வசதிகள் இருக்கின்றன. இது விரைவான டெலிவரியை உறுதி செய்யும்’’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Automobile, Mahindra