மகிந்திரா கார்களின் விலையில் அதிகபட்சமாக ₹3.06 லட்சம் வரை தள்ளுபடி!

XUV500

கேயூவி 100, NXT, ஆல்டுராஸ் G4 போன்ற கார்களுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை அதிகபட்சமாக ₹3.06 லட்சம் வரை விலையில் சலுகை பெற முடியும்

  • Share this:
மகிந்திரா நிறுவனம் புதிதாக கார் வாங்குபவர்களுக்காக இந்த ஏப்ரல் மாதம் வரை மாடலுக்கு ஏற்ப அதிகபட்சமாக ₹3.06 லட்சம் வரை விலையில் சலுகை அறிவித்துள்ளது.

புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக தனது பிஎஸ் - 6 மாடல் கார்களுக்கு சில கவர்ச்சிகரமான விலை தள்ளுபடி சலுகையை மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. மகிந்திராவின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி புத்தம் புதிய தார் ஜீப்பை தவிர்த்து இதர மாடல் கார்களுக்கு அதிகபட்சமாக ₹3.06 லட்ச ரூபாய் விலை சலுகையை அறிவித்டுள்ளது.

புதிதாக கார் வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் கேஷ் ஆஃபர், எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்பரேட் தள்ளுபடி போன்ற ஏராளமான சலுகைகளை பெற முடியும். இதனை பயன்படுத்தி கேயூவி 100, NXT, ஆல்டுராஸ் G4 போன்ற கார்களுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை அதிகபட்சமாக ₹3.06 லட்சம் வரை விலையில் சலுகை பெற முடியும். இருப்பினும் இந்த தள்ளுபடி விலையானது ஒவ்வொரு டீலர்ஷிப்களுக்கும் வேறுபட்டதாக இருக்கும்.

மகிந்திரா KUV100 NXT காருக்கு அதிகபட்ச சலுகையாக ₹ 62,055 கிடைக்கிறது. இதில் விலை தள்ளுபடியாக ₹ 38,055, எக்ஸ்சேஞ்ச் போனஸ் வகையில் ₹ 20,000, கார்பரேட் போனஸாக அதிகபட்சம் ₹ 4,000 வரை தள்ளுபடியும் கிடைக்கும்.

மகிந்திராவின் சப் காம்பேக்ட் எஸ்யூவியான XUV300 காருக்கு அதிகபட்ச சலுகையாக ₹ 44,500 கிடைக்கிறது. இதில் விலை தள்ளுபடியாக ₹ 10,000, எக்ஸ்சேஞ்ச் போனஸ் வகையில் ₹ 25,000, கார்பரேட் போனஸாக அதிகபட்சம் ₹ 4,500 வரை தள்ளுபடியும், பிற சலுகைகளாக ₹ 5000 வரை சலுகை கிடைக்கிறது.

Alturas G4 SUV காருக்கு அதிகபட்சமாக ₹ 3.06 லட்சம் சலுகையை மகிந்திரா நிறுவனம் தருகிறது. இதில் விலை தள்ளுபடியாக ₹ 2.2 லட்சமும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் வகையில் ₹ 50,000, கார்பரேட் போனஸாக அதிகபட்சம் ₹ 16,000 வரை தள்ளுபடியும், பிற சலுகைகளாக ₹ 20000 வரை சலுகை கிடைக்கிறது.

Marazzo MUV காருக்கு அதிகபட்சமாக ₹ 41,000 சலுகையை மகிந்திரா நிறுவனம் தருகிறது. இதில் விலை தள்ளுபடியாக ₹ 20,000, எக்ஸ்சேஞ்ச் போனஸ் வகையில் ₹ 15,000, கார்பரேட் போனஸாக அதிகபட்சம் ₹ 6,000 வரை தள்ளுபடியும் சலுகை கிடைக்கிறது.

Scorpio


Scorpio காருக்கு அதிகபட்சமாக ₹ 36,542 சலுகையை மகிந்திரா நிறுவனம் தருகிறது. இதில் விலை தள்ளுபடியாக ₹ 7,042, எக்ஸ்சேஞ்ச் போனஸ் வகையில் ₹ 15,000, கார்பரேட் போனஸாக அதிகபட்சம் ₹ 4,500 வரை தள்ளுபடியும், பிற சலுகைகளாக ₹ 10000 வரை சலுகை கிடைக்கிறது. .

XUV500 காருக்கு அதிகபட்சமாக ₹ 85,800 சலுகையை மகிந்திரா நிறுவனம் தருகிறது. இதில் விலை தள்ளுபடியாக ₹ 36,800, எக்ஸ்சேஞ்ச் போனஸ் வகையில் ₹ 25,000, கார்பரேட் போனஸாக அதிகபட்சம் ₹ 9,000 வரை தள்ளுபடியும், பிற சலுகைகளாக ₹ 15,000 வரை சலுகை கிடைக்கிறது.

Bolero காருக்கு அதிகபட்சமாக ₹ 17,500 சலுகையை மகிந்திரா நிறுவனம் தருகிறது. இதில் விலை தள்ளுபடியாக ₹ 3,500, எக்ஸ்சேஞ்ச் போனஸ் வகையில் ₹ 10,000, கார்பரேட் போனஸாக அதிகபட்சம் ₹ 4,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.
Published by:Arun
First published: