25 லட்சமாவது வாகனத்தை வெளியீட்டு சாதனை படைத்த மஹிந்திரா!

நாசிக் தொழிற்சாலையிலிருந்து மட்டும் சுமார் 34 நாடுகளுக்கு மஹிந்திராவின் தயாரிப்புகள் ஏற்றுமதி ஆகி வருகின்றன.

25 லட்சமாவது வாகனத்தை வெளியீட்டு சாதனை படைத்த மஹிந்திரா!
மஹிந்திரா
  • News18
  • Last Updated: February 4, 2020, 6:07 PM IST
  • Share this:
மஹிந்திரா நிறுவனம் தனது 25 லட்சமாவது வாகனத்தை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ கார்தான் மஹிந்திராவின் 25,00,000-வது கார் ஆக வெளியாகி உள்ளது. இச்சாதனை குறித்து மஹிந்திராவின் உற்பத்திப் பிரிவுத் தலைவர் விஜய் கல்ரா கூறுகையில், “எங்களது பயணத்தில் இச்சாதனை மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது. எங்களது 25 லட்சமாவது காரை நாசிக் தொழிற்சாலையிலிருந்து வெளியிட்டுள்ளோம்.

தொடர்ந்து எங்களது உற்பத்தியில் சமாதானங்களுக்கு இடமின்றி கவனம் செலுத்தி வருகிறோம். இதைவிட கூடுதல் சாதனைகளை நிகழ்த்துவோம்” என்றார். மஹிந்திராவின் நாசிக் தொழிற்சாலை கடந்த 1981-ம் ஆண்டு 147 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டது. இங்கிருந்து மட்டும் சுமார் 34 நாடுகளுக்கு மஹிந்திராவின் தயாரிப்புகள் ஏற்றுமதி ஆகி வருகின்றன.


தற்சமயம் மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ, மராசோ, XUV300, பொலீரோ, வெரிடோ, ஆம்புலன்ஸ், தார் ஆகிய வாகனங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் பார்க்க: FASTags அறிமுகத்துக்குப் பின் டோல் காத்திருப்பு நேரம் அதிகமாகியுள்ளது- ஒப்புக்கொண்ட மத்திய அரசு!
First published: February 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading