முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / பழைய ஸ்கார்பியோ புதிய அம்சங்கள்.. கிளாஸிக் ஸ்கார்பியோவை களமிறக்கும் மகிந்திரா..

பழைய ஸ்கார்பியோ புதிய அம்சங்கள்.. கிளாஸிக் ஸ்கார்பியோவை களமிறக்கும் மகிந்திரா..

மகிந்திரா ஸ்கார்பியோ கிளாஸிக்.

மகிந்திரா ஸ்கார்பியோ கிளாஸிக்.

ஸ்கார்பியோ கார் இந்திய சாலைகளில் சில வருடங்கள் முன்பு வரை கோலோச்சியது. பழைய மாடல் ஸ்கார்பியோவுக்கு இன்னும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதை மகிந்திரா நிறுவனம் புரிந்துகொண்டது.

கார், பைக் என்றாலே, குறிப்பிட்ட நிறுவனத்தின் குறிப்பிட்ட மாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். கிளாசிக் மாடல்கள் எல்லா வகையான வாகனங்களிலும் உண்டு. அதில், இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மகிந்திரா என்று பெயர் கேட்டாலே, ஸ்கார்ப்பியோ தான் முதலில் நினைவுக்கு வரும்.

மகிந்திராவின் முந்தைய தலைமுறை ஸ்கார்ப்பியோ, மீண்டும் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு, புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் ஸ்கார்ப்பியோ கிளாஸிக் என்ற பெயரில் வரும் ஆகஸ்ட் 20 அன்று அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. ரீமாடல் செய்யப்பட்டு அறிமுகமாகும் இந்த மாடலின் முக்கிய 5 அம்சங்கள் இங்கே.

புதிய என்ஜின்:

ஒரு வாகனத்தின் என்ஜினை மாற்றுவது என்பது இதய மாற்று சிகிச்சை போல! ஸ்கார்ப்பியோ கிளாஸிக் இதய மாற்று சிகிச்சையோடு, புத்தம் புதிய இதயத்துடன் தயாராக உள்ளது. அதாவது, ஏற்கனவே உள்ள 2179சிசி டீசல் எஞ்சின் மாற்றபப்ட்டு, அதற்கு பதிலாக புதிய 2184சிசி, புதிய 2.2 mHawk பவர்டிரைன் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. புதிய தார் மற்றும் என்ட்ரி-லெவல் ஸ்கார்ப்பியோவில் இருப்பது போல, இந்த என்ஜினில், 130bhp அவுட்புட்டும், 300Nm டார்க்கும் உள்ளன. புதிய அலுமினியம் என்ஜின் பயன்படுத்தப்படுவதால், பழைய மாடலை விட, இந்த கிளாஸிக் மாடலின் எடை 55கிலோ குறைவு என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிப்புற தோற்றத்தில் அசத்தல் ஸ்டைல்:

ரீ-பேட்ஜ் என்றாலே, தோற்றத்தில் கணிசமான மாற்றத்தை அல்லது புதிய ஸ்டைலை எதிர்பார்க்கலாம். கிளாஸிக் ஸ்கார்ப்பியோவில், ஸ்டைலிங் பிரிவு கூடுதலான கவனம் செலுத்தியிருக்கிறது என்பது தெரிகிறது. ஸ்கார்ப்பியோவின் முகப்பு, முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் காணப்படுகிறது, அதில் புதிய ஆறு குரோம் ஃபினிஷிங் செய்யப்பட்ட வெர்டிக்கள் ஸ்லேட்களையும் கொண்டுள்ளது.

மேலும், வாகனத்தின் முகப்பில் மஹிந்திராவின் புதிய ‘ட்வின் பேக்ஸ்’ சின்னமும், சில்வர் நிறத்தில் ஃபாக்ஸ் தட்டும் உள்ளது. பழைய மாடலில் இருப்பது போலவே 17 இன்ச் வீல்கள் உள்ளன, இருப்பினும் கிளாசிக்கின் டாப் வேரியன்ட்டில் இரட்டை-நிறத்தில் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. 2007 எடிஷனில் காணப்பட்ட ரியர் டவர் விலக்குகள் கிளாசிக்கில் இடம்பெற்றுள்ளன.

மகிந்திரா ஸ்கார்பியோ கிளாஸிக்.
மகிந்திரா ஸ்கார்பியோ கிளாஸிக்.

ஸ்கார்ப்பியோ கிளாஸிக் ஐந்து நிறங்களில் வருகின்றது. பேர்ல் வைட், நெபோலி ப்ளாக், ரெட் ரேஜ், டி’சாட் சில்வர், கேலக்சி கிரே ஆகிய வண்ணங்களில் வருகிறது.

நேர்த்தியான இன்டீரியர்

வெளிப்புறம் மாற்றினால் மட்டுமே போதுமா? காரின் உட்புறத்திலும் வசதியை மேம்படுத்தி, நேர்த்தியாக வடிவமைத்துள்ளது மஹிந்திரா. கருப்பு மற்றும் பீஜ் நிறத்தின் காம்பினேஷனில் கிளாசிக் மாடலின் கேபின் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக இட வசதி, காற்றோட்டம், பீஜ் நிறத்தில் குவில்ட் இருக்கைகள் என்று நேர்த்தியாக அலங்கரித்துள்ளது. மேலும், மரத்தாலான பேனல்கள் மற்றும் ஆண்டிராய்டில் இயங்கும் 9 இன்ச் இன்ஃபோட்டைன்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் அம்சம் என்று புதிய தொழில்நுட்ப அம்சங்களை சேர்த்துள்ளது.

மகிந்திரா ஸ்கார்பியோ கிளாஸிக் இன்டீரியர்.
மகிந்திரா ஸ்கார்பியோ கிளாஸிக் இன்டீரியர்.

மேம்படுத்தப்பட்ட ரைடு மற்றும் ஹேண்ட்லிங்

புதிய ஸ்கார்ப்பியோ கிளாஸிக்கின் சஸ்பென்ஷன், மல்டி டியூனிங் வால்வ் கான்சென்ட்ரிக் லேண்ட் டேம்பர்களுடன் வருகிறது. இந்த வால்வ் டிசைன், சஸ்பென்ஷன் அமைப்பு உடனடியாக ரெஸ்பான்ட் செய்வதை உறுதி செய்கிறது. இதன் மூலம், பல விதமான சாலை அமைப்புகளில் எளிதாக ஓட்டிச் செல்லும் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

மஹிந்திரா கிளாஸிக் தவறவிட்டது:

ஒரு SUVக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இருந்தாலும், ஸ்கார்ப்பியோ கிளாசிக் ஆட்டோ ஹெட்லாம்ப்ஸ், ரெயின் சென்சிங் வைப்பர்கள், விண்ட்ஸ்க்ரீன் வைப்பர் கட்டுப்பாடு, டயர் அழுத்தம் கண்காணிப்பு என்று பல முக்கியமான அம்சங்களைத் தவறவிட்டுள்ளது.

First published:

Tags: Cars, Mahindra