இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு மகேந்திரா நிறுவனம் தார் ஜீப்பை பரிசாக வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி கடந்த நவம்பர் மாதத்தில் டி20, ஒரு நாள், மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. இதன் டெஸ்ட் தொடரை இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.
இந்திய அணியில் விராட் கோலி, அஸ்வின், பும்ரா உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் காயம் மற்றும் சொந்தக் காரணங்களுக்காக வெளியேறிய நிலையில் ஆறு புதுமுக வீரர்களுடன் களமிறங்கி இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாறு படைத்தது.
இந்த வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த அறிமுக வீரர்களான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், நடராஜ், முகமது சிராஜ், சர்த்துல் தாக்கூர், சுப்மன் கில் மற்றும் சைனி ஆகியோர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தார் ஜீப் பரிசாக வழங்கப்படும் என அறுவித்தார்.
அதன்படி சென்னை நந்தனத்தில் உள்ள மகேந்திரா ஷோரூமில் வாஷிங்டன் சுந்தருக்கு தார் ஜீப் பரிசாக வழங்கப்பட்டது. சென்னை மண்டல தலைவர் ஹரி அவர்கள் தார் ஜீப்பின் சாவியை வழங்க வாஷிங்டன் பெற்றுக்கொண்டார். பிறகு பரிசாக பெற்ற தார் ஜீப்பை தனது இல்லத்திற்கு குடும்பத்துடன் ஓட்டிச்சென்றார் வாஷிங்டன்.