உலகம் முழுவதும் முன்னனி கார் நிறுவனங்கள் பல இருந்தாலும் அவைகளுடன் போட்டி போடும் இந்திய நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கார் தயாரிப்பில் இந்தியாவின் பாரம்பரியமான நிறுவனங்களுள் மஹிந்த்ரா நிறுவனமும் ஒன்று. ஒரு காலத்தில் மஹிந்த்ரா நிறுவனத்தின் ஜீப்கள் இல்லாத அரசு அலுவலகங்களே இந்தியாவில் கிடையாது எனலாம். அந்த அளவிற்கு இந்தியாவின் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்த்ரா, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப, உலக சந்தையில் போட்டியிடும் அளவிற்கு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் அசத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்திய கார் தயாரிப்பு தொழிலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது மஹிந்த்ரா நிறவனம். ஆம் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்ட முதல் கார் தயாரிப்பு ஆலை என்கிற பெருமையை மஹிந்த்ரா நிறுவனத்தின் புனே தொழிற்சாலை பெற்றுள்ளது
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவிற்கு அருகில் உள்ள சக்கான் கார் தயாரிப்பு தொழிற்சாலை மஹிந்த்ராவின் எக்ஸ்யுவி-700 மற்றும் ஸ்கார்பியோ N ரக எக்ஸயுவி கார்களை தயாரிக்கிறது. இந்த தொழிற்சாலை தான் தற்போது 5ஜி மயமாகியிருக்கிறது. இதற்காக பார்த்தி ஏர்டெல் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது டெக் மஹிந்த்ரா நிறுவனம்.
தற்போது தயாரிக்கப்படும் நவீன ரக கார்கள்அனைத்தும் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிறன்றன. கார்களை இயக்கும் பெரும்பாலான அம்சங்கள் தானியங்கி தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கபப்டுகின்றன. இந்த தானியங்கி செயல்பாடுகள் நடைமுறைப்படுத்துவதற்காவே கணினி மூலம் புதிய சாஃப்ட்வேர்கள் உதவியுடன் புரோக்ராம் செய்யப்பட்ட சிபக் பொருத்தப்படுகின்றன. காரின் அனைத்து இயக்கங்களும் இசிஎம் எனப்படும் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் மோல் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்காக நவீன சாஃபட்வேர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Read More : ஹார்ட் அட்டாக் வந்தாலும் இந்த கார் உங்கள காப்பாத்தும்... அசத்தலான எலெக்ட்ரிக் கார்!
இதனால் வாகனத்தை இயக்குபவர்களுக்கு சொகுசான அனுபவம் கிடைப்பதோடு, சென்சார்கள் மூலம் கிடைக்கும் முன்கூட்டிய எச்சரிக்கைகளால் பாதுகாப்பும் மேம்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்துவதற்காகத்தான் டெக் மஹிந்த்ரா நிறுவனம் தற்போது ஏர்டெல் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது. புதிய 5ஜி தொழில்நுட்ப அணுகுமுறையால் கார் தயாரிப்பில் மேலும் நவீனத்தை புகுத்த முடியும் என்றும், துல்லியமான புரோக்ராம்களை மேலும் துல்லியமயமாகவும், தாமதமின்றி செயல்படுத்த முடியும் என்றும் கூறுகிறார் ஏர்டெல் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான அஜய் சித்காரா.
மேலும், காரின் வண்ணங்கள், வெளிப்புற வடிமைப்பு, தரப் பரிசோதனை, மேம்படுத்துதலுக்கான ஆராய்ச்சி உள்ளிட்ட தயாரிப்பு தொழில்நுட்பங்களுக்காக 5ஜி சேவையை திறம்பட பயன்படுத்தும் என்பதோடு, புதிய வாகனங்களுக்கான தேவை, ஆர்டர்கள், தயாரிப்பு நிலைமை, டெலிவரி போன்ற சந்தைபடுத்துதலையும் தாமதமின்றி துல்லியமாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். இதனால் தயாரிப்பு மற்றும் விநியோகத்தின் நேர்த்தியும் மேம்படும். இது போன்ற மேலும் பல தொழில்நுட்ப மேம்பாடுகளை 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ள இருப்பதாகவும் ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Airtel, Anand Mahindra, Automobile, Mahindra