சூப்பரான சலுகையை அறிவித்துள்ள மஹிந்திரா நிறுவனம்: குறிப்பிட்ட மாடல்களுக்கு ரூ.80,000 வரை தள்ளுபடி அறிவிப்பு!

மஹிந்திரா

இந்த சலுகைகள் இந்த மாத இறுதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என நிறுவனம் அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் மஹிந்திராவின் குறிப்பிட்ட வாகனத்தை வாங்கும்போது, பண தள்ளுபடிகள், கார்ப்பரேட் சலுகைகள், பரிமாற்ற போனஸ் மற்றும் இலவச உதிரி பாகங்கள் போன்ற வடிவில் நன்மைகளைப் பெறலாம்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது தனித்துவமான மாடல்களான எக்ஸ்யூவி 500, மராஸ்ஸோ, ஸ்கார்பியோ, மற்றும் எக்ஸ்யூவி 300 உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடியை வழங்கி வருகின்றன. இந்த சலுகை அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதையும் மற்றும் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இதன் விலை குறைவுக்காக காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. 

  மேலும், இந்த சலுகைகள் இந்த மாத இறுதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என நிறுவனம் அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் மஹிந்திராவின் குறிப்பிட்ட வாகனத்தை வாங்கும்போது, பண தள்ளுபடிகள், கார்ப்பரேட் சலுகைகள், பரிமாற்ற போனஸ் மற்றும் இலவச உதிரி பாகங்கள் போன்ற வடிவில் நன்மைகளைப் பெறலாம். விநியோகஸ்தர்களால் வழங்கப்படும் இந்த தள்ளுபடி சலுகைகள் குறித்து கீழே காண்போம்.

  மஹிந்திரா எக்ஸ்யூவி 500 (Mahindra XUV500): 

  இந்த வாகனம் ரூ.36,800 ரொக்க தள்ளுபடி உட்பட ரூ.80,800 வரை தள்ளுபடி சலுகைகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி வாகனத்தின் விலை ரூ.13.83 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. மொத்தமாக வழங்கப்படும் சலுகைகளில் ரூ.20,000 பரிமாற்ற போனஸ், ரூ.9,000 கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ.15,000 மதிப்புள்ள பாகங்கள் போன்றவையும் அடங்கும். இந்த எஸ்யூவி BS6-இணக்கமான 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் விருப்பத்துடன் வருகிறது. இது 155 ஹெச்பி / 360 என்எம் டார்க்  திறனை உற்பத்தி செய்கிறது.

  மராஸ்ஸோ (Marazzo): 

  வாடிக்கையாளர்கள் இந்த வாகனத்தை ரூ.20,000 ரொக்க தள்ளுபடி உட்பட மொத்தம் ரூ.41,000 மதிப்புள்ள சலுகைகளுடன் பெறலாம். மேலும், இந்த மொத்த சலுகையில் ரூ.15,000 பரிமாற்ற போனஸ் மற்றும் ரூ .6,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை விநியோகஸ்தர்களால் வழங்கப்படுகின்றன. மேலும், BS6-இணக்கமான 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் இந்த வாகனம் இயங்குகிறது. இது 122.6 ஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளியிடுகிறது.

  Also read... ஜனவரி 2021ல் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் இவைகள் தான்!

  மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio): 

  இதன் விலை ரூ.12.67 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. ஸ்கார்பியோவை ரூ.39,000 வரை தள்ளுபடியுடன் பெறலாம். இதில் ரூ.15,000 பரிமாற்ற போனஸ் உட்பட, வாகனத்தை வாங்குபவர்கள் ரூ.10,000 வரை ரொக்க தள்ளுபடி, ரூ.4,500 கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ.10,000 மதிப்புள்ள பாகங்கள் ஆகியவற்றைப் பெறலாம். இந்த வாகனம் BS6-இணக்கமான 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 140 ஹெச்பி / 320 என்.எம். டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

  மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV300): 

  இந்த வாகனத்தின் விலை ரூ.7.95 லட்சம் முதல் தொடங்குகிறது. எக்ஸ்யூவி ரூ.10,000 வரை ரொக்க தள்ளுபடி, ரூ .25,000 பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ .4,500 மற்றும் ரூ.5,000 மதிப்புள்ள பாகங்கள் வழங்கப்படுகிறது. மாடல் 110.1 ஹெச்பி 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மோட்டார் மற்றும் 116.6 ஹெச்பி 1.5 லிட்டர் டீசல் மில் உள்ளிட்ட இரண்டு எஞ்சின் தேர்வுகளுடன் வருகிறது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: