கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் மஹிந்திரா நிறுவனம்

மஹிந்திரா நிறுவனம் கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கவுள்ளது.

கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் மஹிந்திரா நிறுவனம்
கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கும் மஹிந்திரா நிறுவனம்
  • Share this:
பண்டிகை காலம் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்க சிறப்பு தள்ளுபடியுடன் வாடிக்கையாளர்களை ஈர்த்து, இந்த பண்டிகை காலத்தில் வருமானம் அதிகரிக்கும் வகையில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். தற்போது இந்தியாவின் மிகப் பெரிய பயன்பாட்டு வாகன உற்பத்தி நிறுவனமாக உள்ள மஹிந்திரா, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பண தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற தள்ளுபடிகளை வழங்க முன்வந்துள்ளது.

மஹிந்திரா பொலிரோவிலிருந்து யு.வி வரம்பு உள்ளிட்ட அதன் பெரும்பாலான மாடல்களான ஸ்போர்ட் பயன்பாட்டு வாகனமான எஸ்.யூ.வி அல்டுராஸ் ஜி4 மாடல்கள் வரை 3.6 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடியை வழங்குகிறது. மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தார் மற்றும் கே.யு.வி100 நெஸ்ட் மாடல்களுக்கு சலுகைகள் செல்லுபடியாகாது என்றும் தெரிவித்துள்ளது.

Also read: இந்தியாவில் அக்டோபர் 2ம் அறிமுகமான '2020 மஹிந்திரா தார்'


வாகன மாதிரி வாரியான சலுகை விவரங்களின் பட்டியல்:

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4

மஹிந்திராவின் முதன்மை எஸ்.யூ.வி ஆன அல்டுராஸ் ஜி4 மாடல் ரூ.2.6 லட்சம் வரை ரொக்க தள்ளுபடி; மேலும், பரிமாற்றம் செய்தால் ரூ. 50,000, ரூ. 20,000 வரை கருவிகள், ரூ. 16,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவையும் வழங்குகிறது. தி அல்டுராஸ், மிகவும் மலிவான விலையில் எஸ்.யூ.வி கார் இரு வகைகளில் கிடைக்கிறது. இது டொயோட்டா பார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் ரகத்தில் இருக்கும்.மஹிந்திரா கே.யு.வி100 நெஸ்ட்

தற்போது கிடைக்கக்கூடிய சிறந்த ஏழு இருக்கைகள் கொண்ட எஸ்யூவி கார்களில் எக்ஸ்.யூ.வி 500 ஒன்றாகும். இது 2.2 லிட்டர் டீசல் எஞ்சினை கொண்டுள்ளது. மஹிந்திரா அதன் சில வகைகளுக்கு ரூ.55,000 தள்ளுபடியை வழங்குகிறது, எக்ஸ்.யூ.வி 500-ன் W5, W7 வகைகளுக்கு ரூ.51,000 வரை தள்ளுபடி உண்டு. மேலும், W9, W11 மாடல்களுக்கு ரூ.57,000 வரை தள்ளுபடி உண்டு. எக்ஸ்.யூ.வி 500 என்பது மஹிந்திராவின் வரிசையில் மிகப் பழமையான மாடல்களில் ஒன்றாகும்.மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திராவின் நிலையான மற்றொரு பிரபலமான எஸ்யூவி காரான ஸ்கார்பியோ, நான்கு வகைகளில் தேர்வு செய்யப்படுகிறது. அது S5, S7, S9 மற்றும் S11 ஆகும். S5 வேரியண்டிற்கு அதிகபட்சமாக ரூ.20,000 ரொக்கம், ரூ.25,000 பரிமாற்ற போனஸ், ரூ .10,000 வரை மதிப்புள்ள ஸ்பேர்ஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் தள்ளுபடி S7, S9 மற்றும் S11 வகைகள் பரிமாற்றத்துக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. அவை பண தள்ளுபடிகள் மற்றும் இலவச பாகங்கள் பெற தகுதியற்றவை. இதிலும் மஹிந்திரா அடுத்த ஆண்டு அனைத்து புதிய மாடலையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா மராசோ

BS 6 எமிஷன் தரங்களுக்கு இணங்க மேம்படுத்தப்பட்ட மிக சமீபத்திய மாடல் மராசோ MPV ஆகும். இது M 4 + மற்றும் M 6 + வகைகளில் ரூ.10,000 ரொக்க தள்ளுபடி, பரிமாற்ற சலுகைகளில் ரூ.15,000, கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.6,000 மற்றும் ரூ.5,000 மதிப்புள்ள பாகங்கள் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300

எக்ஸ்யூவி 300 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களில் ரூ.30,000 வரை தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது. இதில் ரூ.25,000 பரிமாற்ற போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி 5,000 ரூபாய் ஆகும்.

மஹிந்திரா பொலிரோ

பொலிரோ கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பழமையானது என்றாலும், இது மஹிந்திரா வரிசையில் இருந்து மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும். இது பல ஆண்டுகளாக கணிசமான மாற்றங்களையும் மேம்படுத்தல்களையும் கண்டுள்ளது. மேலும், BS6 எஞ்சினையே இது கொண்டுள்ளது. ஆனால் செயலிழப்பு சோதனை செய்யப்பட்ட ஒன்று. பொலிரோ ரூ.20,500 தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது, இதில் ரூ.6,500 ரொக்க தள்ளுபடி, ரூ.10,000 பரிமாற்ற நன்மை மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ.4,000 ஆகியவை அடங்கும்.
First published: October 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading