Home /News /automobile /

ரூ.70,000 வரை தள்ளுபடி + சலுகைகள்.. மஹிந்திரா கார்கள் மீது தாறுமாறான ஆஃபர்கள்!

ரூ.70,000 வரை தள்ளுபடி + சலுகைகள்.. மஹிந்திரா கார்கள் மீது தாறுமாறான ஆஃபர்கள்!

மஹிந்திரா பொலிரோ நியோவின் விலை ரூ.8.99 லட்சம் (ரூ. 11.33 லட்சம் வரை) முதல் தொடங்குகிறது

மஹிந்திரா பொலிரோ நியோவின் விலை ரூ.8.99 லட்சம் (ரூ. 11.33 லட்சம் வரை) முதல் தொடங்குகிறது

மஹிந்திரா பொலிரோ நியோவின் விலை ரூ.8.99 லட்சம் (ரூ. 11.33 லட்சம் வரை) முதல் தொடங்குகிறது

மஹிந்திரா - இந்தியாவின் பழமையான கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். பொலிரோ, ஸ்கார்பியோ, தார் மற்றும் எக்ஸ்யூவி என நீங்கள் அடிக்கடி சாலைகளில் பார்க்கும் மிகவும் பிரபலமான கார்களை தன் போர்ட்ஃபோலியோவில் கொண்டுள்ள மஹிந்திரா நிறுவனம், ஹைபிரிட் மற்றும் ஆல் எலெக்ட்ரிக் வெஹிக்கில்களிலும் (மின்சார வாகனங்களிலும்) பணியாற்றி வருகிறது.

இந்த ஆட்டோமொபைல் நிறுவனமானது அதன் வாகனங்களுக்கான அபரிமிதமான தேவையை பூர்த்தி செய்ய போராடும் மறுகையில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களின் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கவும் தவறுவதில்லை. அப்படியாக, மஹிந்திரா கார்களின் மீது அறிவிக்கப்பட்டுள்ள, இந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான தள்ளுபடிகளை பற்றிய விவரங்கள் இதோ:

ஸ்கார்பியோ (Scorpio)

மஹிந்திரா ஸ்கார்பியோ இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான எஸ்யூவி-க்களில் ஒன்றாகும். இப்போது இந்த கார் ரூ.13.19 லட்சம் (ரூ. 18.15 லட்சம் வரை) என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கிறது. மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் மீது ரூ.34,000 வரையிலான சலுகைகளை வழங்குகிறது; ரூ.15,000 எக்ஸ்சேன்ஜ் இன்சென்டிவ்வும், ரூ.4,000 கார்ப்பரேட் ரிடெக்ஷனும் உள்ளது. ஸ்கார்பியோ எஸ்3 மாடல் ஆனது ரூ. 5000 மதிப்புள்ள ஆக்சஸெரீஸ்களை உள்ளடக்கி உள்ள மறுகையில் ஸ்கார்பியோ எஸ்5 ஆனது ரூ.15,000 மதிப்புள்ள ஆக்சஸெரீகளுடன் வருகிறது. ஸ்கார்பியோ எஸ்7, எஸ்9 அல்லது எஸ்11 மாடல்களுக்கு எந்த ஆக்சஸெரீகளும் கிடைக்கவில்லை.

பொலேரோ நியோ (Bolero Neo)

மஹிந்திரா பொலிரோ நியோவின் விலை ரூ.8.99 லட்சம் (ரூ. 11.33 லட்சம் வரை) முதல் தொடங்குகிறது. இந்த பிரபலமான எஸ்யூவி இப்போது ரூ.24,000 வரை போனஸுடன் வருகிறது, இதில் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் இன்சென்டிவ் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்டும் அடங்கும். மேலும் இது ரூ.6000 மதிப்புள்ள ஆக்சஸெரீஸுடன் வருகிறது.

மராஸ்ஸோ (Marazzo)

இந்தியாவில் மஹிந்திரா மராஸ்ஸோவின் விலை தோராயமாக ரூ.12.8 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் - டெல்லி) ஆகும். இது மூன்று ட்ரிம் லெவல்களில் வருகிறது: எம்2, எம்4+ மற்றும் எம்6+. மராஸ்ஸோ பிஎஸ்6 தற்போது ரூ.40,200 வரையிலான இன்சென்டிவ்களுடன் விற்பனை செய்யப்படுகிறது; ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் நன்மையும் ரூ.5,200 கார்ப்பரேட் சலுகையும் அணுக கிடைக்கும். எம்2 மாடலின் மீது ரூ.20,000 என்கிற ரொக்க தள்ளுபடியையும் மஹிந்திரா அறிவித்துள்ளது. மறுகையில் உள்ள எம்4 மற்றும் எம்6 மாடல்கள் மீது ரூ.15,000 ரொக்க தள்ளுபடி கிடைக்கிறது.

அல்டுராஸ் ஜி4 (Alturas G4)

மஹிந்திராவின் ஃபிளாக்ஷிப் கார் ஆன அல்டுராஸ் ஜி4 தற்போது தேவைக்கேற்ப மட்டுமே கிடைக்கிறது. அதாவது போதுமான எண்ணிக்கையிலான முன்பதிவுகள் இருந்தால் மட்டுமே, நீங்கள் இந்த எஸ்யூவியை வாங்க முடியும். இந்த காரின் மீது தற்போது அதிகபட்சமாக ரூ.70,000 தள்ளுபடி அணுக கிடைக்கிறது. இதில் ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் மற்றும் ரூ.20,000 மதிப்பிலான ஆக்சஸெரீஸ்களும் அடங்கும். இந்த எஸ்யூவி-யின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.28.84 லட்சம் தொடங்கி .31.34 லட்சம் வரை செல்கிறது.

எக்ஸ்யுவி300 (XUV300)

இந்த மாதம், எக்ஸ்யுவி300 மாடல் ரூ.69,000 என்கிற தள்ளுபடியை பெறுகிறது. இதன் அனைத்து வேரியண்ட்களிலும் ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4000 கார்ப்பரேட் சேவிங்ஸ் அணுக கிடைக்கும். கூடுதலாக, டபுள்யூ8 மாடலுக்கு ரூ.30,000 என்கிற ரொக்க சலுகை மற்றும் ரூ.10,000 மதிப்புள்ள ஆக்சஸெரீஸ்களும் வழங்கப்படுகிறது. டபுள்யூ6 டீசல் ஏஎம்டி மாடலானது ரூ. 8,100 என்கிற ரொக்க தள்ளுபடிக்கு தகுதி பெறுகிறது, அதே நேரத்தில் டபுள்யூ6 பெட்ரோல் எம்டி & ஏஎம்டி மாடலானது ரூ.10,000 ரொக்கத் தள்ளுபடியையும் மற்றும் ரூ.5,000 எக்ஸ்ட்ராஸ் சலுகையையும் பெறுகிறது.
Published by:Esakki Raja
First published:

Tags: Mahindra

அடுத்த செய்தி