Home /News /automobile /

Alfa CNG-யின் Passenger, Cargo வேரியன்ட்களை அறிமுகப்படுத்திய Mahindra Electric Mobility.. விலை என்ன.?

Alfa CNG-யின் Passenger, Cargo வேரியன்ட்களை அறிமுகப்படுத்திய Mahindra Electric Mobility.. விலை என்ன.?

Mahindra Electric

Mahindra Electric

Mahindra Electric CNG Variants | மஹிந்திரா குரூப்பின் (Mahindra Group) ஒரு அங்கமான மஹிந்திரா எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Mahindra Electric Mobility), சமீபத்தில் பேசஞ்சர் மற்றும் கார்கோ (passenger and cargo) வேரியன்ட்ஸ்களில் தனது புதிய ஆல்ஃபா சிஎன்ஜி மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும் ...
மஹிந்திரா எலெக்ட்ரிக் மொபிலிட்டி அதன் பிரபலமான ஆல்ஃபா பிராண்டின் அடிப்படையில் பயணியர் போக்குவரத்து ரகமாக  Alfa Passenger DX BS6 CNG வாகனத்தையும், சரக்கு போக்குவரத்து ரகமாக  Alfa Load Plus வாகனத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. Alfa Passenger DX BS6 CNG-ன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2,57,000-ஆகவும், Alfa Load Plus வாகனத்தின் விலை ரூ.2,57,800-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மஹிந்திரா எலெக்ட்ரிக்கின் மூன்று சக்கர வாகனமான ஆல்ஃபா பிராண்டை அடிப்படையாக கொண்ட இந்த புதிய 2 வாகன வேரியன்ட்கள் இந்தியாவில் உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, பீகார், ஜார்கண்ட், கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் வாங்குவதற்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய 2 வேரியன்ட்களின் அறிமுக நிகழ்வில் பேசிய மஹிந்திரா எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி சுமன் மிஸ்ரா, புதிய ஆல்ஃபா சிஎன்ஜி கார்கோ மற்றும் பேசஞ்சரின் அறிமுகமானது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம், டீசல் மற்றும் சிஎன்ஜி உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களை வழங்குவதன் மூலம் வாகன சந்தையில் எங்களை முழு திறன் கொண்ட நிறுவனமாக மாற்றி இருக்கிறது. நாட்டின் சில பகுதிகளில் சிஎன்ஜி ஸ்டேஷன்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எங்களது புதிய ஆல்ஃபா வேரியன்ட்கள் பெரிய சேமிப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்றார்.



இதனிடையே மஹிந்திரா எலெக்ட்ரிக் கடந்த பிப்ரவரியில், கிராமப்புற இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு பொது சேவை மையங்கள் (CSC) எனப்படும் அரசு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தது. நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க, கிராமப்புற இந்தியாவில் வேலைவாய்ப்பை வழங்க, பொது சேவை மையங்களுடன் மஹிந்திரா எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் கைகோர்த்து கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு Treo மற்றும் Alfa போன்ற பல மின்சார வாகனங்களை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Also Read : ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக மலிவு விலைவில் கிடைக்கும் டாப் 5 கார்களின் பட்டியல்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் தனது மின்சார மூன்று சக்கர வாகனமான Treo-வை மகாராஷ்டிராவில் 2.09 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) விலையில் அறிமுகப்படுத்தியது. இது IP65-மதிப்பிடப்பட்ட மேம்பட்ட லித்தியம்-அயன் பேட்டரி பேக்கை கொண்டுள்ளது மற்றும் 8 kW பவர், 42 Nm பீக் டார்க்கை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Mahindra

அடுத்த செய்தி