Home /News /automobile /

எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யும் தேதியை அறிவித்த மஹிந்திரா நிறுவனம்!

எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யும் தேதியை அறிவித்த மஹிந்திரா நிறுவனம்!

மஹிந்திரா குழுமம்

மஹிந்திரா குழுமம்

Mahindra : மஹிந்திரா குழுமம் (Mahindra Group) இப்போது முதல் முறையாக எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகன பிரிவில் களமிறங்க உள்ளது.

நாட்டில் சமீப காலமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் மஹிந்திரா குழுமம் (Mahindra Group) இப்போது முதல் முறையாக எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகன பிரிவில் களமிறங்க உள்ளது. Mahindra and Mahindra குரூப்பின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் இந்த முக்கிய நடவடிக்கை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

Mahindra and Mahindra குரூப் கடந்த ஆண்டு தனது லட்சியமான Born Electric Vehicle platform பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த பிளாட்ஃபார்ம் ஒரு பிரத்யேக EV கட்டமைப்பாக இருக்கும், இது எலெக்ட்ரிக் மொபிலிட்டி ஸ்பேசில் உற்பத்தியாளரின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனிடையே இப்போது, 'Born Electric Vision' இந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்படும் என்று M&M அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மஹிந்திரா குழுமத்தின் எலெக்ட்ரிக் வாகனம் வரும் ஜூலை 2022-க்குள் இந்திய சாலைகளில் புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வரவு ஏற்கனவே EV செக்மென்ட்டில் இருக்கும் மும்பையை தளமாகக் கொண்ட வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் MG மோட்டார் போன்ற பிராண்டுகளுக்கு போட்டியாக களமிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 



 

நுகர்வோரை மையமாக கொண்ட பிராண்டாக இருக்கும் காரணத்தால் Mahindra Born Electric மலிவு விலை பிரிவில் காம்பேக்ட் எஸ்யூவி ஃபார்ம் ஃபேக்டராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையரில் (Oxfordshire) வடிவமைக்கப்பட்டுள்ளது. "நாங்கள் ஒரு புதிய உலகத்தை கற்பனை செய்கிறோம். மேலும் இந்த புதிய உலகில் பிறக்கும் முதல் குழந்தைகள் அமைதியின்றி வருகின்றனர்…” என்று ஆனந்த் மஹிந்திரா ட்விட் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ஒரு பட்டனை அழுத்தினால் நிறம் மாறும் கார் – பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் புதிய மாடல்

Mahindra Born Electric-ன் ட்விட்டர் பேஜும் சமீபத்தில் லைவிற்கு வந்துள்ளது. "Born Electric vehicles-ன் ஒரு மறுகற்பனை செய்யப்பட்ட உலகிற்கு வரவேற்கிறோம். எங்களின் உலகளாவிய வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் மற்றும் நிபுணர்கள் குழுவால் எலெக்ட்ரிஃபையிங் மற்றும் உற்சாகமான செயல்திறன் உங்களுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இன்று முதல் நாங்கள் எங்கள் Born Electric Vision-ஐ வெளிப்படுத்துகிறோம். விரைவில் ஜூலை 2022.." என்று அந்த பேஜின் முதல் ட்விட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள் : மனித தலையீடு இல்லாமல் எலெக்ட்ரிக் கார்களை தானாகவே சார்ஜ் செய்யும் ரோபோ - 2024-இல் வெளிவரும்!

இந்த புதிய EV தவிர மஹிந்திரா தனது பிரபலமான SUV XUV300 வாகனத்தை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றுகிறது. மேலும் மற்ற அனைத்து OEM-க்களை போலவே, மஹிந்திராவும் sustainable mobility-யில்ல் அதிக முதலீடு செய்கிறது. மேலும் அடுத்தடுத்து மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உருவாக்க ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Anand Mahindra, Mahindra

அடுத்த செய்தி