நாட்டின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா, நமது நாட்டின் ராணுவத்திடம் இருந்து அதிகளவிலான ஸ்கார்பியோ கிளாசிக் யூனிட் வாகனங்களுக்கான ஆர்டரை பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது அதிகாரபூர்வ சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ள தகவலில் இந்திய ராணுவத்திடம் இருந்து 1,470 மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் யூனிட்களுக்கான ஆர்டரை சமீபத்தில் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. டெலிவரி செய்யப்படும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் யூனிட்கள் நாடு முழுதும் உள்ள இந்திய ராணுவத்தின் பல பிரிவுகளுக்கு அனுப்பப்பட உள்ளது.
நமது இந்திய ராணுவம் பலவித பணிகளை செய்ய ஏராளமான பேஸஞ்சர் வெஹிகிள் மாடல்களை பயன்படுத்துகிறது. இதில் டாடா சஃபாரி, மாருதி சுசுகி ஜிப்சி, ஃபோர்ஸ் கூர்க்கா மற்றும் டாடா செனான் போன்ற வாகனங்கள் அடங்கும். தற்போது இந்த பட்டியலில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் சேர உள்ளது பல பணிகளை மேற்கொள்வதில் ராணுவத்தின் திறன்களை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இது தொடர்பான தகவலை வெளிப்படுத்திய ட்விட்டில் "நாடு முழுவதும் உள்ள இந்திய ராணுவத்தின் 12 பிரிவுகளுக்கு அனுப்பும் வகையில் 1,470 ஸ்கார்பியோ கிளாசிக் யூனிட் வாகனங்ளுக்கான ஆர்டரை பெற்றுள்ளோம் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்த இந்திய ராணுவத்திற்கு நன்றி" என கூறி இருக்கிறது. Scorpio Classic வாகனமானது அதன் ஸ்டைலிங் எலமென்ட்ஸ்களின் அடிப்படையில் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டது மற்றும் புதிய தயாரிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட Scorpio-N மாடலில் இருந்து வேறுபட்டது.
Also Read : ரூ.10 லட்சம் பட்ஜெட்.. ஆபத்து குறைவு.. பாதுகாப்பான கார்களின் லிஸ்ட் இதோ!
ஆர்டரின் பேரில் இந்திய ராணுவத்திற்காக எதிர்காலத்தில் டெலிவரி செய்யப்பட ஸ்கார்பியோ கிளாசிக் யூனிட்களில் ஏதேனும் சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்படுமா என்பதை பற்றி மஹிந்திரா நிறுவனம் எதையும் குறிப்பிடவில்லை. எனினும் வழக்கமான ஸ்கார்பியோ கிளாசிக் யூனிட்களில் ராணுவத்திற்காக ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் கூட, பாதுகாப்பு தொடர்பான காரணங்களுக்காக இந்த விவரங்கள் வெளியிடப்படாமல் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். வழக்கமான ஸ்கார்பியோ கிளாசிக் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சினுடன், 130bhp ஆற்றலை வெளிப்படுத்துகிறது மற்றும் 300Nm பீக் டார்க்கை வழங்குகிறது. இந்த மாடலில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இல்லை.
6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த குறிப்பிட்ட மாடலில் 4x4 ஆப்ஷன் இல்லை. எனினும் இப்போது மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் வாகனம் புதிய கிரில், அப்டேட் செய்யப்பட்ட ஃப்ரன்ட் பம்பர், ரிவைஸ்ட்டுட LED புரொஜெக்டர் ஹெட் லைட்ஸ், ரீடிசைன் செய்யப்பட்ட அலாய்ஸ் மற்றும் அப்டேட்டட் டெயில் லைட் லேஅவுட் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இந்த வாகனத்தின் கேபினில் 9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian army, Mahindra