முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / இதுவரை இல்லாத அதிகப்பட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம்

இதுவரை இல்லாத அதிகப்பட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம்

மஹிந்திரா XUV700

மஹிந்திரா XUV700

Mahindra & Mahindra | நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா லிமிட்டெட், நடப்பாண்டு செப்டம்பர் மாதத்திற்கான அதன் ஒட்டுமொத்த வாகன விற்பனை பற்றிய அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் 64,486 வாகனங்களை விற்பனை செய்துள்ளதன் மூலம் அதிகபட்ச மாதாந்திர விற்பனை அளவை 129% வளர்ச்சியுடன் பதிவு செய்துள்ளது மற்றும் 179,673 வாகனங்கள் விற்பனையுடன் அதிகபட்ச காலாண்டு விற்பனையையும் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 77% வளர்ச்சியை குறிக்கிறது.

அதே போல கடந்த மாதம் இந்த ஆட்டோமேக்கர் நிறுவனம் யூட்டிலிட்டி வாகன பிரிவில் 34,262 SUV-க்களை விற்று 166% வளர்ச்சியை பதிவு செய்து, வாகனங்களின் SUV விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தவிர நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் த்ரீ-வீலர்கள் செக்மென்ட்டில் 4,071 வாகனங்களின் அதிகபட்ச மாதாந்திர விற்பனையையும் கண்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 170% வளர்ச்சியடைந்துள்ளது. இந்த பிரிவில் செப்டம்பர் மாதத்திற்கான நிறுவனத்தின் ஏற்றுமதி 2,538 வாகனங்களாக இருந்தது. செப்டம்பர் மாதத்திற்கான ஏற்றுமதி 2,538 வாகனங்களாக இருந்தது. கமர்ஷியல் வெஹிகிள் செக்மென்ட் பிரிவில் மஹிந்திரா ஆகஸ்ட் 2022 இல் 21,666 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த மாத விற்பனை எண்ணிக்கையுடன், 2022 செப்டம்பர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் அதன் மார்க்கெட் ஷேரை 9.7% உயர்த்த முடிந்தது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Scorpio-N-ன் டெலிவரிகளை தொடங்கிய பிறகு, மஹிந்திரா XUV700 மற்றும் தார் ஆகியவற்றிற்கான தேவை அதிகரிப்பை காண முடிகிறது, அதே நேரத்தில் பண்டிகை காலத்தில் தேவை அதிகரித்து வருகிறது என்று மஹிந்திரா நிறுவனம் கூறி இருக்கிறது.

மஹிந்திரா & மஹிந்திரா லிமிட்டெட் நிறுவனத்தின் ஆட்டோமேட்டிவ் டிவிஷன் தலைவர் Veejay Nakra பேசுகையில், பண்டிகை காலத்தின் வலுவான தேவையுடன் இந்த செப்டம்பர் மாதம் எங்கள் நிறுவனத்திற்கு மிகவும் உற்சாகமான மாதமாக இருந்தது. SUV-க்கள், 3.5 டன்களுக்கும் குறைவான LCV மற்றும் எங்களின் லாஸ்ட் மைல் மொபிலிட்டி பிராண்டுகள் ஆகியவற்றிலிருந்து எங்கள் தயாரிப்புகளின் போர்ட்ஃபோலியோ முழுவதும் மிகவும் வலுவான தேவை மற்றும் செயல்திறனை நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read : குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ் - 2022 யின் டாப் 5 பைக்குகளின் பட்டியல்!

மஹிந்திரா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது, இவற்றில் முதன்மையானது ஆல்-எலெக்ட்ரிக் மஹிந்திரா XUV400 ஆகும். இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி-க்கான டெஸ்ட் டிரைவ் டிசம்பரில் இருந்து தொடங்கும், மற்றும் முன்பதிவு, வெளியீடு ஜனவரி 2023 முதல் தொடங்கும். மஹிந்திரா XUV400 39.4 kW பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, இது SUV 8.3 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை அடைய உதவுகிறது, அதே நேரத்தில் 456 கிமீ வரம்பை வழங்குகிறது.

First published:

Tags: Automobile, Mahindra