ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

புதிய EV யூனிட் மூலம் 2027-க்குள் 30 சதவீதம் எலெக்ட்ரிக் SUV-க்களை விற்க திட்டமிட்டுள்ள மஹிந்திரா நிறுவனம்.!

புதிய EV யூனிட் மூலம் 2027-க்குள் 30 சதவீதம் எலெக்ட்ரிக் SUV-க்களை விற்க திட்டமிட்டுள்ள மஹிந்திரா நிறுவனம்.!

mahindra and mahindra

mahindra and mahindra

Mahindra E-SUV | இந்தியாவின் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், நாட்டில் தனது எலெக்ட்ரிக் ஸ்போர்ட்-யூட்டிலிட்டி வெஹிகிள்களின் (E-SUVs) விற்பனையை பெரிதும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறி இருக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிட்டட் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் அதன் மொத்த விற்பனையில் 20-30% எலெக்ட்ரிக் ஸ்போர்ட்-யூட்டிலிட்டி வாகனங்கள் (SUV-க்கள்) இருக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. மஹிந்திரா மற்றும் பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் (BII) ஆகிய 2 நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளதாகவும், 4 சக்கர பயணிகள் எலெக்ட்ரிக் கார்களில் கவனம் செலுத்தும் EV யூனிட்டிற்காக $250 மில்லியன் (ரூ.1,925 கோடி வரை) BII முதலீடு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பையை தளமாக கொண்ட மஹிந்திரா நிறுவனம், ஸ்கார்பியோ மற்றும் தார் உள்ளிட்ட இந்தியாவின் மிகவும் பிரபலமான கம்ப்யூஷன் எஞ்சின் SUV-க்களை விற்பனை செய்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் EV செக்மென்ட்டிலும் இதே போல ஆதிக்கம் செலுத்த திட்டமிட்டுள்ளது. மஹிந்திரா தலைமை செயல் அதிகாரி அனிஷ் ஷா ஒரு பெட்டியில் கூறுகையில் E-SUVs விறபனையில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இது ஒரு முதலீடு மட்டுமல்ல. இதுவே தொடக்கப் புள்ளியும் கூட. இலக்கை நோக்கி இன்னும் நாங்கள் முன்னேறும் போது அதிக மதிப்பீட்டில் அதிக முதலீட்டாளர்களை வரவழைப்போம் என்றார்.

ஒட்டு மொத்தமாக மஹிந்திரா நிறுவனம் FY24-27-ல் EV வணிகத்தில் மொத்த மூலதனம் ரூ.8,000 கோடி என கோடிட்டு காட்டியுள்ளது. M&M நிறுவனத்தின் லட்சியத் திட்டங்கள் மூலம் வேகமாக வளர்ந்து வரும் இந்திய EV சந்தையில் இந்நிறுவனம் ஒரு பெரிய இடத்தைப் பெற முயல்கிறது. இந்திய EV தொழில்துறையின் முன்னோடியாகக் கருதப்படும் M&M, பெங்களூருவை தளமாகக் கொண்ட The Reva Electric Car Co. Ltd இல் 2010 இல் பெரும்பான்மையான பங்குகளை வாங்கி அதன் பெயரை மஹிந்திரா ரேவா எலெக்ட்ரிக் வெஹிகிள்ஸ் பிரைவேட் லிமிட்டட் என மாற்றியது.

இந்தியாவின் EV மார்க்கெட்டில் டாடா மோட்டார்ஸ் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், நாட்டின் ஆண்டு விற்பனையான சுமார் 3 மில்லியன் வாகனங்களில் 1% மட்டுமே எலெக்ட்ரிக்காக இருந்து வருகின்றன. 2030-க்குள் இதை 30% ஆக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இந்நிலையில் தான் மார்ச் 2027-க்குள் தங்களது மொத்த SUV விற்பனையில் 20% முதல் 30% வரை எலெக்ட்ரிக் மாடல்களை விற்க மஹிந்திரா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த 30% விற்பனையில் ஆண்டுக்கு சுமார் 2,00,000 எலெக்ட்ரிக் SUV-க்களை விற்க திட்டமிட்டு உள்ளது மஹிந்திரா. இதனிடையே மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது முதல் எஸ்யூவி-யான XUV 400-ஐ வரும் செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விற்பனை 2023 முதல் காலாண்டில் தொடங்கும், மேலும் நான்கு மாடல்கள் மார்ச் 2026-க்குள் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. M&M நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் த்ரீ-வீலர்கள் மற்றும் சிறிய வர்த்தக வாகனங்களை உற்பத்தி செய்கிறது. இருப்பினும், இந்த வாகனங்கள் புதிய EV நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்காது என தெரிகிறது.

First published:

Tags: Automobile, Electric Cars, Mahindra