• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • மஹிந்திரா உடன் இணைந்தது ஃபோர்டு... விற்பனையை அதிகரிக்க கூட்டணியா?

மஹிந்திரா உடன் இணைந்தது ஃபோர்டு... விற்பனையை அதிகரிக்க கூட்டணியா?

ஃபோர்டு - மஹிந்திரா

ஃபோர்டு - மஹிந்திரா

இந்தியாவில் ஃபோர்டு பங்கு இருப்பது போல் கொரியாவில் சாங்யாங் மோட்டார் கம்பெனி உடனும் பங்குதாரராக மஹிந்திரா நிறுவனம் உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் ஃபோர்டு விற்பனையை இனி மஹிந்திரா& மஹிந்திரா நிறுவனமே கவனித்துக்கொள்ள உள்ளது.

இந்தியாவின் ஃபோர்டு உரிமை தற்போது மஹிந்திரா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஃபோர்டின் 51 சதவிகித பங்குகள் மஹிந்திராவிடமும் 49 சதவிகித பங்குகள் ஃபோர்டு நிறுவனத்திடமும் இருக்கும்.

பணியாளர்கள், தொழிற்சாலைகள் ஆகியன மஹிந்திரா நிறுவனம் வசம் உள்ளன.

என்ஜின் இயக்க தொழிற்சாலை, சர்வதேச பிசினஸ் யூனிட், ஃபோர்டு க்ரெடிட் மற்றும் ஃபோர்டு ஸ்மார்ட் மொபிலிட்டி ஆகியன ஃபோர்டின் வசம் இருக்கும். இந்த ஒப்பந்தம் 2020-ம் ஆண்டின் மத்தியில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு இந்தியா உரிமை மட்டுமே மஹிந்திராவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணியின் கீழ் மூன்று யூவி ரக வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்தியாவில் யூவி ரக வாகன விற்பனையைப் பொறுத்தவரையில் மஹிந்திரா நிறுவனம் நீண்ட காலமாக முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் ஃபோர்டு பங்கு இருப்பது போல் கொரியாவில் சாங்யாங் மோட்டார் கம்பெனி உடனும் பங்குதாரராக மஹிந்திரா நிறுவனம் உள்ளது.

மேலும் பார்க்க: வீழ்ச்சியிலும் முதலிடம்...சரியும் மாருதி சுசூகி சாம்ராஜ்யம்...!

விஜய்64 பற்றிய தொடர் அப்டேட்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: