ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

மேட் இன் இந்தியா கார்..! ஏற்றுமதியில் சாதனை படைத்த மாருதி சுசுகி…

மேட் இன் இந்தியா கார்..! ஏற்றுமதியில் சாதனை படைத்த மாருதி சுசுகி…

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

2021ஆம் ஆண்டு 2 லட்சத்து ஐந்தாயிரம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது மாருதி சுசுகி. இந்த ஆண்டு ஏற்றமதியில் 28 விழுக்காடு அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது மாருதி சுசுகி நிறுவனம். முன்பு இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த போது மருதி உத்யோக் என அறியப்பட்ட இந்த நிறுவனம் புதிய மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்து அமோக வரவேற்பை பெற்றது. தற்போது, மாருதி உத்யோக் நிறுவனம் ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான சுசுகியின் வசம் உள்ளது. ஆனாலும், இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு இந்தியாவிலேயே மாருதி சுசுகி நிறுவனம் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்திய கார் சந்தையில் மாருதி சுசுகியின் பங்கு மட்டும் சுமார் 40விழுக்காட்டிற்கு மேல். அந்த அளவிற்கு இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக திகழும் மாருதி சுசுகி கார் ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் கனிசமான அளவு இந்தியாவில் தயாரிக்கப்படும்  கார்களை மாருதி சுசுகி நிறுவனம் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது மேட் இன் இந்தியா கார் திட்டத்தின் கீழ் முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன் கார்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது மாருதி சுசுகி.

உள்நாட்டு சந்தை மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் மேட் இன் இந்தியா கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2022 ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் 2 லட்சத்து 63 ஆயிரம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களில் பெரும்பான்மையான இடத்தை பெலினோ, பிரீசா, டிசைர், ஸ்விஃப்ட் மற்றும் எஸ்-பிரஸ்ஸோ போன்ற மாடல்கள் பிடித்துள்ளன. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஆண்டுக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கார்களை ஏற்றமதி செய்த ஒரே இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுசுகி.

2021ஆம் ஆண்டு 2 லட்சத்து ஐந்தாயிரம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது மாருதி சுசுகி. இந்த ஆண்டு ஏற்றமதியில் 28 விழுக்காடு அதிகரித்துள்ளது. உலக வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் தரத்தின் மீதான எங்களின் திடம் ஆகியவற்றால் இது சாத்தியமானது என்றும், இந்த ஏற்றுமதி வளர்ச்சி இந்திய அரசின் மேட் இன் இந்தியா கொள்கையின் மீது எங்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கிறது என்று பெருமிதத்தோடு கூறுகிறார் மாருதி சுசுகி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும் முதன்மை செயல் அதிகாரியுமான ஹிசாசி டெகோச்சி. 2028 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டின் ஏற்றுமதி இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் ஒரு லட்சத்து 13ஆயிரம் கார்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு 2.6 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது மாருதி சுசுகி நிறுவனம். வரும் ஆண்டில் எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி கார்களை அதிக அளவில் தயாரிக்கவும் மாருதி சுசுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : ரொசாரியோ ராய்

First published:

Tags: Automobile, Maruti, Trending